உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 போரைச் சித்திரிப்பது அக் காப்பியம். இலத்தின் மொழியின் பழங்காவியமாக இலங்குவது வர்ஜில் என்பார் வழங்கிய ஈனிட் என்னும் இனிய நூலாகும். அஃது ஈனியஸ் என்ற அரசனது வரலாற்றை விரித் துரைப்பதாகும். ஆகவே எந்த நாட்டுப் பழங்காப்பி யத்தைப் பார்த்தாலும் முடிமன்னர் வரலாற்றையே வகுத்துரைக்கக் காணலாம். и இளங்கோவடிகள் முதலில் அமைத்த இனிய காவியமாகிய சிலப்பதிகாரமோ முடிமன்னரைத் தலைவ சாகக் கொண்டதன்று. குடிமக்களுள் ஒருவகிைய கோவலனைத் தலைவனுகவும், ஒரு பெண்ணுகிய கண் ணகியைத் தலைவியாகவும் கொண்டு பாடப்பெற்றது. இங்ஙனம் குடிமக்களைத் தலைவராகக்கொண்டு பாடப் பெற்ற முதற்காவியம் சிலப்பதிகாரமே. ஆதலின் காவிய உலகிலும் இளங்கோவடிகள் ஒரு புரட்சியை .ண்டு பண்ணினுர் என்று சொல்லுதல் பொருந்தும். உ. இளங்கோ துறவு தமிழ்க் காவியங்களுள் முதன்மை பெற்றதாகிய சிலப்பதிகாரத்தை மொழிந்தருளிய இளங்கோவடிகள், சேரவேந்தன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இளைய மகளுராவர். இவரைப்பெற்ற தாய், சோழன் மணக் கிள்ளியின் மகள் தற்சோ?னயாவள். நெடுஞ்சேரலாத னுக்கும் கற்சோணைக்கும் மைந்தர் இருவர் பிறந்தனர். அவருள் மூத்தவன் செங்குட்டுவன் என்பான். பேரரச கிைய நெடுஞ்சேரலாதன் ஒருநாள் தன் மைந்தர் இரு வரும் இருபால் அமரப் பெருமையுடன் அத்தாணி மண்டபத்தில் அரசு விற்றிருந்தான். அவ் அரசவையுள் புகுந்து பரிசில் பெறவந்த நிமித்திகன் ஒருவன்,