உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 தாங்கினும் நகரைவிட்டு அகலாது, எனது கல்லாட் சிக்குத் துணைபுரிய வேண்டும்,” என்று அன்புடன் வேண்டினுன். இங்ங்னம் தந்தையும் தமையனும் சிந்தையில் நிறைந்த அன்பால் செப்பிய மொழிகளே, இளங்கோ செவியுறக் கேட்டனர். எனினும் தாம் கொண்ட உறுதியில் சிறிதும் தளர்ந்தாரல்லர். அவ் அரசவையி லேயே தவக்கோலம் தாங்கி, அரண்மனையினின்று நீங்கினர். வஞ்சிமாநகரின் கீழ்த்திசையில் அமைந்த குணவாயில் கோட்டம் என்னும் சமண் பள்ளியைச் சார்ந்து வாழ்ந்து வரலாயினர். அரசர்க்குரிய ஆடையணிகளே நீக்கி, அருந்தவருக் குரிய கல்லாடை புனைந்து இளங்கோவடிகள் என்று எல்லோரும் ஏத்துமாறு தூய துறவற வாழ்வைத் தொடங்கினர் இளங்கோ. அன்றுமுதல் பல்வேறு சமய நூல்களே ஆராயத் தலைப்பட்டார். சங்கத் தமிழ் நூல்களேயெல்லாம் சங்கையறக் கற்கலானர். இன்பத் தமிழையே தமக்கு ஏற்ற துணையாகக் கொண்டு, பொழுதை இனிது போக்கினர். கல்வித் துறையிலேயே தமது கருத்தை யெல்லாம் செலுத்திய அடிகளார் அரும்பெருங் தமிழ்க் கவிஞரானர். அவர் மேற் கொண்ட தூய துறவுநெறி, புலமையைப் பெருக்கிக் கொள்ள அரிய வாய்ப்பாயிற்று. புலமைநலங் கனிந்த அடிகளார் தமது புகழுடம்பை கிலேகாட்டத்தக்க காலத்தை எதிர்கோக்கி இருந்தார். - க. குன்றக்குறவர் கூறிய செய்தி தந்தையாகிய இமயவரம்பனுக்குப் பின்னர்ப் பொன்முடி புனைந்து சேரநாட்டை ஆண்ட செங்குட்டு