உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வன் ஒரு சமயம் மலேவளம் காணப் புறப்பட்டான். அவனுடன் இளங்கோவடிகளும் சென்றனர். அது சம யம் மதுரை மாநகரத்தினின்று வந்த செந்தமிழ்ப் புலவ ராகிய சீத்தலேச் சாத்தனரும் அவர்களுடன் சேர்ந்து புறப்பட்டார். மன்னன் செங்குட்டுவன் தன் படை கள் புடைசூழப் பேரியாற்றங்கரை மணல்மேட்டை அடைந்தான். ஆங்குக் கூடாரம் அமைத்து எல் லோரும் இன்பமாக அமர்ந்திருந்தனர். செங்குட்டுவன் மலைவளம் காண வந்திருக்கும் செய்தியை மலைவாழ் வேட்டுவர் அறிந்தனர். மலையி லுள்ள மாண்புறு பொருள்களை எல்லாம் கையுறையாக எடுத்துக் கொண்டு மன்னனேக் காண வந்தனர். பேரி யாற்றங்கரை மணல்மேட்டில் மகிழ்வுடன் வீற்றிருந்த மன்னனைக் கண்ணுற்றனர். அவன் திருமுன்பு எய்தி, 'ஏழ் பிறப்படியேம்; வாழ்க! நின்கொற்றம் என்று அவனே வாழ்த்தி அடிபணிந்து நின்றனர். குன்றக் குறவர்தம் வரவைக் கண்ட செங்குட்டுவன் அவர்கட்கு மலர்முகம் காட்டினன். 'விேர் வாழும் மலே நாட்டில் நிகழ்ந்த சிறப்பு ஏதேனும் உளதோ?' என வினவினன். நெடுவேள் குன்றத்தில் தாம் கண்ட வியத்தகு நிகழ்ச்சியை வேந்தனுக்கு அறிவித்தற் பொருட்டே ஆங்கு வந்த வேட்டுவர், 'அரசர் பெருமானே ! திரு முன்பில் தெரிவிக்கற்பாலதாகிய அரியதொரு செய்தி யுண்டு. திருச்செங்குன்று மலேமேலுள்ள ஒரு வேங்கை மரத்தின் கீழலில் மார்பு ஒன்றை இழந்த மங்கை ஒருத்தி வந்து நின்ருள். விரித்த கூந்தலோடும் பெருத்த கவலே யோடும் காணப்பட்டாள் அக் காரிகை. அன்னவளைக் கண்ணுற்ற யாங்கள், அவள் அண்மையிற் சென்று,