உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நீர் யார்?' என வினவினுேம். அவள், மாடமதுரை யோடு அரசு கேடுற வல்வினே வந்து உருத்த காலேக் கணவனே அங்கு இழந்து போக்த கடுவினையேன் யான்' ன்று மறுமொழி தந்து கின்ருள். அன்று மாலேப் பொழுதில் விண்ணிலிருந்து விமானம் ஒன்று இறங்கி யது. அதன் கண் தேவர்கள் பலர் அமர்ந்திருந்தனர். அவர்கள் அப் பெண்ணின்மீது மலர்மாரி சொரிந்தனர். அவ் விமானத்திலிருந்த அவள் கணவனைத் தேவர்கள் அவளுக்குக் காட்டினர். கணவனேக் கண்ட அக் காரிகை கழிபேருவகையுடன் அவ் விமானத்தில் ஏறிக்கொண் டாள். சிறிது நேரத்தில் அவ் விமானம் விண்ணில் மேல் கோக்கிப் பறந்து மறைந்தது. அப் பெண்ணின் கல்லாள் பெருந் தெய்வமாகவே விளங்கினுள். அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவளோ? யார் பெற்ற மகளோ? தாங்கள் அறியோம். இவ் அரிய செய்தியை அரசர் பெருமானிடம் அறிவித்தற்காகவே இங்கு வந்தோம்' என்று சொல்வி வாழ்த்தி கின்றனர். குன்றக் குறவர் கூறிய செய்தியைக் கேட்டுச் செங் குட்டுவன் முதலானேர் பெருவியப்புக் கொண்டனர். அப்போது அங்கிருந்த தமிழாசிரியராகிய சாத்தனர் மட் டும் இச் செய்திகேட்டு வியப்புரு:து சிறிதே புன்முறுவல் பூத்தவராய் இருந்தனர். அது கண்ட செங்குட்டுவன் புலவரது புன்முறுவலுக்குக் காரணம் யாதோ என வினவினன். உடனிருந்த இளங்கோவடிகளும் அதன் உண்மையுணரும் விருப்பைக் குறிப்பால் உணர்த்தினர். சேரனின் கோப்பெருக் தேவியாகிய வேண்மாளும் புலவ ரின் சொற்களைக் கேட்கும் வேட்கையுடன் இருந்தாள். ஆங்கிருந்த அமைச்சர் முதலான சுற்றத்தவரெல்லாம் புலவரது கருத்தை அறியும் ஆர்வத்துடன் இருந்தனர். |