பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 மாதவி கலைத்திறன் இவர்கள் பிறந்த காவிரிப்பூம்பட்டினத்திலேயே கணிகையர் குலத்துதித்த மாதவி என்னும் மங்கையும் வாழ்ந்தனள். அவள் தன் குலத்திற்கேற்ப ஆடல் பாடல்களில் அரிய திறல் பெற்று விளங்கினுள். அழகி லும் இணையற்று ஒளி வீசினுள். சிறந்த கலையரசியாகத் திகழ்ந்த மாதவியின் கலைத்திறனைச் சோழன் கரிகாலன் கேள்வியுற்ருன் அரசவையில் மாதவியின் நடன அரங் கேற்றம் நடைபெற ஏற்பாடு செய்தான். நாட்டிலுள்ள பெருஞ்செல்வர்க்கெல்லாம் அரங்கேற்றத்திற்கு வரு மாறு அழைப்பு விடுத்தான். பெருவணிகனுகிய மாசாத்துவான் மகன் கோவலனுக்கும் அழைப்பு வந்திருந்தது. கோவலன் பல கலைகளே நுட்பமாகக் கற்றுணர்ந்தவன். கலேயின் உயர்வு இனிமைகளைக் கண்டு பாராட்டும் கலைச்சுவைஞன். ஆதலின் மாதவி பின் நடன அரங்கேற்றத்தைக் காணக் கோவலன் பேராவலுடன் அரசன் பேரவை அடைந்தான். சோழன் பேரவையில் கடனம் ஆடிய கங்கை மாதவி கலையரசியாக மட்டுமின்றி எழிலரசியாகவும் காணப்பட்டாள். அவள் தனது கலைத்திறமையாலும் கட்டழகாலும் அனேவருடைய உள்ளத்தையும் கவர்ந்து விட்டாள். சோழன் கரிகாலன், மாதவிக்குத் தலைக் கோலரிவை' என்ற தலைசிறந்த பட்டமளித்துப் பாராட் டிஞன். ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்னைப் பரிசாக வழங்கினன். தான் அணிந்திருந்த பச்சை மணிமாலை யொன்றை இச்சையுடன் கொடுத்தான். இங்கனம் அரசனுல் சிறப்பிக்கப் பெற்ற மாதவி பெருமகிழ்ச்சி யுடன் தனது மனேயடைந்தாள். .