உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வொன்றைத் தன் தோழியாகிய தேவந்தியுடன் கூறிக் கொண்டிருந்தாள். அவள், கின் கணவர் விரைவில் வந்து சேருவார், கவலற்க என்று தேற்றிள்ை. அவ் வேளேயில் மனையகம் புகுந்த கோவலன் வாடிய மேனி யுடன் வந்த கண்ணகியைக் கண்டான். அவளை நெருங்கி, ' கண்மணி! கின்னேப் பிரிந்து இன்னல் பல இழைத்துவிட்டேன். மாயப் பொய் கூட்டும் மாயத்தா ளாகிய மாதவி என்னே வஞ்சித்துவிட்டாள். அவ ளுடன் கூடிக் களித்து, 5ம் குல முன்னேர் தேடிக் குவித்த குன்றனய செல்வத்தை யெல்லாம் தொலைத் தேன். யான் உற்ற வறுமை, எனக்குப் பெருகாணத் தைத் தருகிறது," என்று சொல்லி கின்ருன். கோவலன் சொற்களைக் கேட்ட கண்ணகி, மாத விக்குக் கொடுக்கப் பொருள் இல்லாமையால் இங்ஙனம் வருந்துகின்ருன் போலும் என்று கினைந்தாள். புன் முறுவல் பூத்த இன்முகம் காட்டி, ஏன் வருந்து கிறீர்கள் ? என்பால் இன்னும் விலையுயர்ந்த இரு சிலம்புகள் உள்ளன. அவற்றை எடுத்துக்கொள்ளுங் கள்,” என்று கூறிச் சிலம்புகளைக் கையேந்தி நின்ருள். கற்பரசியாகிய கண்ணகியின் அற்பு நிறைந்த உள்ளத் தைக் கண்ட கோவலன், இச் சிலம்பை முதற் பொருளாகக்கொண்டு மீண்டும் வாணிகம் நடத்து வேன். இழந்த பொருளையெல்லாம் ஈட்டுவேன். நீ என்னுடன் மதுரை நகருக்கு எழுவாயாக,” என்று அன்புடன் வேண்டினன். மதுரைக்கு எழுதல் இரவின் கடையாமத்தில் எவரும் அறியாத வண்ணம் இருவரும் மனையினின்று வெளியேறினர்.