21 கவுந்தியடிகளின் சாப மொழிகளைக் கேட்டுக் கண்ணகியும் கோவலனும் பெரிதும் வருந்தினர். அவ் இழிகுல மக்களின் அறியாமைக்கு இரங்கினர். பேதை மையால் பேசிய அவர்களே மன்னித்துச் சாப விடை கொடுத்தருள வேண்டினர். தவமகளாகிய கவுந்தியும் கோபம் தணிந்து, இவர்கள் பன்னிரு திங்களளவும் இவ் இன்னலேப் பெற்றுப் பின்னர் முன்னே உருப் பெறுவாராக!' என்று சாபவிடை அருளிள்ை. அதன் பின்னர் ஆங்கு வந்த மறையோன் ஒருவல்ை மதுரைக் குச் செல்லும் வழியை அறிந்து பன்னாள் நடந்து, ஒரு நாள் வைகறைப் பொழுதில் பார்ப்பனச் சேரியொன் றின் பக்கத்தில் அமைந்த கோயிலே அடைந்தனர். கோவலன் அவ்விடத்தில் கண்ணகியையும் கவுந்தியடி களையும் இருக்கச்செய்து, காலைக்கடன் கழித்தற் பொருட்டுப் பொய்கை யொன்றிற்குச் சென்ருன். கோசிகனைக் காணல் அப்பொழுது மாதவியால் அனுப்பப்பட்ட கோசி கன் என்னும் அந்தணுளன் அங்கு வந்த கோவலனச் சந்தித்தான். அவனைப் பிரிந்த பெற்ருேர், மணி இழந்த நாகம்போல் வருக்திக் கலங்கி ஒடுங்கினர் என்று உரைத்தான். சுற்றமெல்லாம் உயிர் நீங்கிய உடம்பு போல் துயர்க்கடலில் மூழ்கியதென மொழிந்தான். இராமனைப் பிரிந்த அயோத்தி மக்களைப்போன்று, புகார் நகரிலுள்ளார் அனைவரும் புலம்பி வருந்தினர் என்று புகன்ருன். காதலனைப் பிரிந்த மாதவியோ கவலே மிக்குச் செயலற்றுப் படுக்கையில் கிடக்கிருள் என்று பகர்ந்தான். அவள் கொடுத்தனுப்பிய முடங் கலையும் தந்து கின்ருன்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/30
Appearance