பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொற்கொல்லனக் காணுதல் மதுரைப் பெருங் தெருவொன்றில் புகுந்த கோவ லன், தட்டார் பலர் தன்னைப் பின் தொடர்ந்து வரப் பெருமிதமாக நடந்துவரும் பொற்கொல்லன் ஒருவனேக் கண்டான். இவன் மன்னனல் மதிக்கப்பெற்ற மாண் புடையன் போலும் என்று மனத்துட்கொண்டு, அவ னருகில் சென்ருன். அரசன் தேவி அணிதற்கேற்ற இச் சிலம்பினை நீ விலைமதிக்க வல்லாயோ?” என்று வினவினன். அப் பொற்கொல்லனும் தான் வல்லவன் என்று பணிவுடன் சொல்லவே, கோவலன் சிலம்பினை அவனுக்குக் காட்டின்ை. அரண்மனைச் சிலம்பைக் களவாடிய பொய்யனுகிய அப் பொற்கொல்லன், கோவலன் காட்டிய சிலம்பைக் கையில் வாங்கினன். அதன் செய்தொழிற் சிறப்பையெல்லாம் கூர்ந்து கோக்கினன். இஃது அரசன் பெருங்தேவிக் கல்லது பிறருக்குப் பொருந்தாது. இதனே யான் அரசனுக்கு அறிவித்து வருமளவும் விேர் என் சிறுமனேக்கு அருகாகிய இவ் விடத்தில் இருப்பீராக,” என்று கூறி அரண்மனை நோக்கி நடந்தான். பொற்கொல்லன் சூழ்ச்சி அப் பொற்கொல்லன் தான் அரண்மனைச் சிலம்பை வஞ்சித்த செய்தி வெளிப்படுவதன் முன் இப் புதிய சிலம்பை மன்னனுக்குக் காட்டித் தப்பித்துக்கொள்ள எண்ணினன். அரண்மனையை அடைந்த பொற்கொல் லன், கோப்பெருங் தேவியின் ஊடல் தணிக்க அவள் கோயில் நோக்கி விரைந்து சென்றுகொண்டிருக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனைக் கண்டு வணங்கினன். ‘அரசே! அரண்மனைச் சிலம்பைத் திருடிய கள்வன் அடியேனுடைய குடிசையில் வந்திருக்கின்ருன்,'