பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வில் மாதரி நீராடுதற்பொருட்டு வையைத் துறைக்குச் சென்ருள். அப்பொழுது கோவலன் சிலம்பு திருடிய கள்வனென்று அரசனல் கொலே செய்யப்பெற்ற செய்தியை மதுரையுள்ளிருந்து வந்த மகளொருத்தி சொல்லக் கண்ணகி கேட்டாள். அவ்வளவில், அவள் அடைந்த துயருக்கோர் அளவில்லை. மயங்கி விழுந்தாள். பலவாறு புலம்பி அழுதாள். அந்தோ! என் செய் வேன்' என்று அலறித் துடித்தாள். மீண்டும் கோவல னேக் காணுதற்கு எழுந்து ஓடினுள். ஆய்ச்சியர் நடுவே கின்று, சூரியனை நோக்கி, காய்கதிர்ச் செல்வனே ே அறிய என் கணவன் கள்வனே?” என்ருள். கின் கணவன் கள்வனல்லன்; அவனேக் கள்வனென்ற இந் நகரை விரைவில் தியுண்னும்,' என்று வானில் குர லான்று எழுந்தது. - கோவலன் கண்ணகியைத் தேற்றுதல் கதிரவன் கூறிய சொற்களைக் கேட்ட கண்ணகி, அங்குகின்றும் அடங்காத சிற்றத்துடன் புறப்பட்டாள். கையில் மற்ருெரு சிலம்பைத் தாங்கிக் கண்டார் கடுங்கும் வகையில் விதி வழியே விரைந்து சென்ருள். ஆங்குள்ள மகளிரை நோக்கி, 'என் கணவனே முன் போலக் காண்பேன்! அவன் சொல்லும் கல்லுரையைக் கேட்பேன்! அங்ங்னம் கேளேஞயின் என்னே இகழ் மின்!” எனச் சூளுரைத்தாள். கோவலன் கொலையுண்டு கிடந்த இடத்தை அடைந்தாள். அவனது உடம்பைத் தழுவித் தரையில் புரண்டு புலம்பிக் கதறினுள். அவ் வளவில் கோவலன் உயிர்பெற்றெழுந்தான். 'கண்ணே! மதிபோன்ற முகம் வாடியதே' என்று சொல்லித் தன் கையால் அவள் கண்ணிரைத் துடைத்தான். அவள் தன் அடிகளைப் பற்றி வணங்கி கிற்க, நீ இங்கிருக்க,