உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 என்று சொல்லி ஊனுடல் ஒழித்துத் துறக்கம் புகுந்தான். கண்ணகி வழக்குரை மீண்டும் கண்ணகி தணியாத கோபத்துடன் அவ்விடத்தினின்று அகன்ருள். பாண்டியன் அரண் மனே வாயிலை அடைந்தாள். அவ்வேளையில் கோப் பெருக்தேவி, தான் கண்ட தீக்களுக்களே அரசனிடம் கூறிக்கொண்டிருந்தாள். அரசன் அனுமதி பெற்றுக் கண்ணகி அவன்முன் சென்று நின்ருள். கண்ணிர் ஆருகச் சொரியக் கையில் தனிச்சிலம்புடன் கின்ற கண்ணகியைப் பாண்டியன் நெடுஞ்செழியன் பார்த் தான். 'கண்ணிர் சொரிய வந்து நிற்கும் பெண்ணே! நீ யார்?’ என்று வினவினன். வினவிய மன்னனுக்கு மறுமொழி கூறத் தொடங் கினுள் கண்ணகி அடைக்கலம் புகுந்த புறவின் துயர் போக்கத் துலேபுக்கான் சிபி வேந்தன். கன்றை இழந்த பசுவின் கண்ணிர் தன் நெஞ்சைச் சுட்டமையால் தன் அருமை மகனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்று முறை செய்தான் மனுவேந்தன். இத்தகைய செங் கோன்மையிற் சிறந்த மன்னர்கள் இருந்தாண்ட பெரும்பெயர்ப் புகார் என் பதியாகும். அவ்வூர்ப் பெருங்குடியர் மரபில் தோன்றிய மாசாத்துவான் என்னும் வணிகன் பெற்ற மகன் கோவலன். அவன் ஊழ்வினை செலுத்திய காரணத்தால் வாழ்தல் வேண்டி நின்னகர்ப் புகுந்து, என் சிலம்பினை விற்க வந்தான். அவன் கள்வனென்று கின்னல் கொலேக்களப்பட்டான்! அவன் மனைவி யான். என் பெயர் கண்ணகி,” என்று கூறினள்.