பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காண்டாய். அவனுடன் விண்ணுலகம் அடைவாய்,” என்று சொல்லிக் கண்ணகியைத் தேற்றியது. கண்ணகி சேரநாடு செல்லுதல் பின்னர்க் கண்ணகி மதுரையினின்று நீங்கி, வையைக் கரைவழியே மேற்கு நோக்கி நடந்தாள். மலே காடாகிய சேரநாட்டை அடைந்தாள். திருச்செங் குன்று என்னும் மலைமேல் ஏறி, ஒரு வேங்கை மரத்தின் பாங்கர் வந்து நின்ருள். அதற்குள் பதின்ைகு நாட் களும் கழிந்தன. அன்று பகல் கழிந்த மாலைப்பொழுதில் கோவலன் தேவவடிவுடன் விமானத்தில் தேவர்கள் சூழ வந்திறங்கினன். அங்கு நின்ற கண்ணகியைத் தன்னுடன் விமானத்தில் ஏற்றிக்கொண்டு தேவர்கள் மலர்மாரி பொழிய விண்ணுலகு அடைந்தான். செங்குட்டுவன் செய்தி உணர்தல் இக் காட்சியைக் கண்ணுரக் கண்ட குன்றக் குற வர்கள் இவள் நாம் வணங்கத்தக்க நற்றெய்வமாவாள்' என்று குரவையாடி வழிபட்டனர். அவர்கள் தாம் கண்ட இவ் அரிய காட்சியை அரசனுக்கு அறிவிக்க விரும்பினர். மன்னனகிய செங்குட்டுவன் மலைவளம் கானும் மனத்தனய்ப் பேரியாற்றங்கரையில் தங்கி புள்ள செய்தியைத் தெரிந்தனர். மலேபடுபொருள்களே யெல்லாம் மன்னனுக்குக் கையுறையாக எடுத்துக் கொண்டு அவனேக் காண வந்தனர். பேரியாற்றங்கரை மணல்மேட்டில் மகிழ்வுடன் வீற்றிருந்த மன்னனைக் கண்டு அடிபணிந்து வாழ்த்தினர். மலைநாட்டில் தாம் கண்ட வியத்தகு நிகழ்ச்சியை மன்னற்கு விளம்பினர். வேட்டுவர் மொழியைக்கேட்ட வேந்தர்பெருமான் வியப்புற்ருன். அவன் தேவியாகிய வேண்மாளும்