31 வியப்படைத்தாள். இளங்கோவடிகளே எல்லேயில லாத பெருவியப்புடன் அமர்ந்திருந்தார். இவர்களுடன் ஆங்கிருந்த கன்னுாற் புலவராகிய சாத்தனரோ வியப் பேதுமின்றிச் சிரிப்புடன் இருந்தார். செங்குட்டுவன் முதலான மூவரின் குறிப்பை அறிந்த பெருந்தமிழ்ப் புலவர், மதுரையில் நிகழ்ந்த, கண்ணகி பற்றிய செய்தி களேயெல்லாம் ஒன்றுவிடாது எடுத்துரைத்தார். அவளேப்பற்றி விசாரித்தறிந்த வரலாற்றையெல்லாம் விளக்கமாக அவர்கட்குச் சொன்னர். கண்ணகிக்குக் கல்லெடுத்தல் சீத்தலைச் சாத்தனர் கூறிய செய்திகளையெல்லாம் கருத்துடன் கேட்ட செங்குட்டுவன் தன் கோப்பெருங் தேவியை விருப்புடன் நோக்கினன். அரசியே! பாண்டியன் நெடுஞ்செழியனுடன் உயிர்த்ேத அவன் பெருந்தேவி சிறந்தவளா? கணவன் இறந்த பின்னர் அவனது கடும்பழி அகற்றி நம்நாடு புகுந்த கண்ணகி சிறந்தவளா?' என்று வினவினன். அதுகேட்ட வேண்மாள், கணவனுடன் உயிர்த்ேத காரிகையாகிய பாண்டிமாதேவி வானுலகில் அவனுடன் சீருறுவா ளாக நம்நாடு நோக்கி வந்த பத்தினித் தெய்வத்தைப் பரசுதல் வேண்டும்,' என்று பதிலுரைத்தாள். உடனே, செங்குட்டுவன் தனது அமைச்சரை நோக்கினன். அவர்கள், பத்தினிக் கடவுளின் படிவம் சமைத்தற்குரிய கல்லேப் பொதியத்திலிருந்தேனும் இமயத்திலிருந்தேனும் எடுத்து வருதல் வேண்டும். பொதியக்கல்லேக் காவிரியினும், இமயக்கல்லைக் கங்கை யினும் ரோட்டித் தூய்மை செய்யவேண்டும்,' என்று சொல்லி நின்றனர். அதுகேட்ட செங்குட்டுவன்,
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/40
Appearance