பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பொதியத்தில் கல்லெடுத்துக் காவிரியில் நீராட்டுதல் சேர மன்னரது வீரத்திற்குப் பொருந்தும் செயலன்று. ஆதலின், இமயத்திலேயே கல்லெடுத்துக் கங்கையில் ரோட்டுவோம்' என்று விரமொழி பகர்ந்தான். செங்குட்டுவன் வீரவுரை கேட்ட படைத்தலைவரும் அதுவே தகுமெனப் பாராட்டினர். அன்றே அனே வரும் அங்கு நின்றும் புறப்பட்டு வஞ்சிமாநகர் அடைக் தனர். உடனே செங்குட்டுவனது வடகாட்டுச் செலவு குறித்து நகரெங்கும் முரசறையப்பட்டது. செங்குட்டுவன் வடநாட்டுச் செலவு அவ்வமயம் இமயத்திலிருந்து வந்த முனிவர் சிலர் செங்குட்டுவனேக் கண்டு செய்தியொன்று கூறினர். வடகாட்டு மன்னர் பலர் கூடியிருந்த திருமண விருந் தொன்றில் கனகன், விசயன் என்னும் இரு மன்னர் தமிழ் வேந்தரை இகழ்ந்து உரைத்ததாக அம் முனி வர்கள் மொழிந்தனர். 'தமிழ் நாட்டை ஆளும் முடி மன்னர்கள் இமய நெற்றியில் வில்லும் புலியும் கயலும் பொறித்த நாளில் எம்போன்ற மன்னர்கள் இல்லை போலும் ' என்று சொல்லி இகழ்ந்த அவ் இழிமொழி, செங்குட்டுவனுக்குப் பெருஞ்சிற்றத்தை உண்டுபண்ணி யது. இவ் இழிவு நமக்கேயன்றிச் சோழ பாண்டி யர்க்கும் இகழ்ச்சியை விளைப்பதன்ருே ஆதலின் இங்ங்ணம் இகழ்ந்த ஆரிய மன்னர் முடிமேலேயே பத்தினிப் படிவத்திற்குரிய கல்லே ஏற்றிக் கொணர் வேன்,” என்று வஞ்சினம் கூறினன். நிமித்திகன் குறித்த கல்வேளையில் செங்குட்டுவன் வாளேயும் குடையையும் பெயர்த்து வடதிசைச் செல விற்கு காட்செய்தான். கால்வகைப் படைகளும் புடை