உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 சூழத் தனது பட்டவர்த்தனக் களிற்றின்மேல் ஏறி. வடகாடு கோக்கிப் புறப்பட்டான். அப்போது வட காட்டிலுள்ள நூற்றுவர்கன்னர் என்னும் மன்னரால் அனுப்பப்பெற்ற தூதுவர், மன்னனைக் கண்டு, கங்கை யைக் கடத்தற்குப் படகுகள் தயாராய் இருக்கும் செய்தியைத் தெரிவித்தனர். அச் செய்தி கேட்டு மகிழ்வுற்ற செங்குட்டுவன் வடநாடு நோக்கி விரைந்து சென்ருன். தன் கட்பாளராகிய கன்னர்களால் அமைக்கப்பெற்ற நாவாய்களில் ஏறிக் கங்கையைக் கடந்து தன் படையுடன் வடகரை அடைந்தான். தன் பகைவர் நாடாகிய உத்தரகோசலத்தை கண்ணி, ஆங்குப் பாடிவீடு அமைத்துத் தங்கின்ை. சேரன் படையுடன் பாசறையில் தங்கியுள்ள செய்தியைக் கண்க விசயர் அறிந்தனர். உத்திரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் ஆகிய மன்னர்களுடன் கனகவிசயர் பெரும்படை குழப் போருக்கு எதிர்ந்தனர். வடவருடன் கடும்போர் வடநாட்டு மன்னர் படையுடன் போருக்கு வருதலைக் கண்ட செங்குட்டுவன் ஆண் சிங்கமொன்று யானேக் கூட்டத்தின் நடுவே பாய்ந்து உழக்கியவாறு போல, அவ் வடவர் படைகளின் நடுவே புகுந்து பாய்ந்து கொன்று குவித்தான். ஒருநாள் பகற்பொழு. திற்குள் அவ் ஆரியப் படையெலாம் சின்ன பின்ன மாகச் சிதறுண்டு ஓடின. தமிழ் காட்டு மன்னரை இகழ்ந்த கனகன் விசயன் என்ற இரு மன்னரும் செங் குட்டுவனுல் சிறைசெய்யப்பட்டனர். தேவாசுரப்போர் பதினெட்டு ஆண்டுகள் நிகழ்ந்தது என்பர். இராம. 3-سا-.6یم .r 5ی