பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ராவணப் போர் பதினெட்டுத் திங்கள் நிகழ்ந்தது என்பர். பாரதப் போர் பதினெட்டு நாட்கள் கடந்தது என்பர். செங்குட்டுவன் கனகவிசயருடன் நடத்திய போரோ பதினெட்டு நாழிகையில் முடிந்தது என்று உலகவரெல்லாம் வியந்து உரைக்குமாறு ஒரே பகற் பொழுதில் வென்று வாகைமாலை குடின்ை. பின்னர்ச் செங்குட்டுவன் தன் படைத்தலைவனுகம் வில்லவன்கோதை என்பானுடன் படைகளே அனுப்பி இமயத்தினின்றும் பத்தினிக் கடவுளின் படிவத்திற்கு வேண்டிய கல்லக் கொண்டுவருமாறு செய்தான். அதனைக் கனகவிசயர் முடிமேல் ஏற்றிக் கங்கையாற்றை அடைந்தான். அதனைக் கங்கையில் முறைப்படி ரோட் டித் தென்கரை சேர்ந்தான். ஆங்கு நூற்றுவர் கன்ன ரால் அமைக்கப்பெற்ற பாடியில் தங்கிப் போரில் வெற்றியுற்ற படையினர்க்கும் படைத்தலைவர்கட்கும் பரிசில்கள் வழங்கிப் பாராட்டினன். மாடலனுக்குக் கொடை இச் சமயத்தில் கங்கையாடி வந்த மாடலன் என் லும் மறையோன், செங்குட்டுவனக் கண்டு வாழ்த்தி, *மாதவி கடற்கரையில் பாடிய கானல்வரிப் பாட்டு, கனக விசய் ரின் மூடித்தலையை நெரித்தது' என்று மொழிந்தான். அது இதட்ட செங்குட்டுவன், அம் மறையவனே நோக்கி, 惠妮 இங்குள்ளார் பலர் அறியாத கைமொழியை அன்ருே வின்ருய், அதன் பொருளே எல்லோரும் அறியச் சொல்லுக,' என்றனன். அவனும் காவிரிப்பூம் பட்டினத்தில் கோவலனும் மாதவியும் இந்திரவிழாவின் இறுதி நாளில் கடலாடச் சென்றது முதலாக இது