பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 காறும் நிகழ்ந்த வரலாற்றை எடுத்துக்கூறித் தனது நகை மொழியை விளக்கினன். இங்ங்னம் பல்வேறு செய்திகளைத் தெரிந்து வந்துரைத்த அந்தணுளணுகிய மாடலனுக்குச் சேரர் பெருமான், தன் நிறையாகிய ஐம்பது துலாம் செம் பொன்னேத் தானமாகக் கொடுத்தான். பின்னர்த் தன் பெரும்படையுடன் தென்திசை நோக்கிப் பெயர்ந்தான். வடநாட்டுச் செலவை மேற்கொண்ட முப்பத்திரண்டு திங்களுக்குப் பிறகு வஞ்சிமாநகரத்தை வந்தடைக் தான். வடவரை வென்று வாகை குடி வரும் சேரர் பெருமானே இளங்கோவடிகளும் அமைச்சர் முதலாயி னேரும் வெற்றி முரசம் முழங்க ஆரவாரத்துடன் வர வேற்றனர். கோப்பெருங் தேவியாகிய வேண்மாள், வெற்றிமாலே புனைந்து வரும் வேந்தர்பெருமானப் புன்முறுவல் பூத்த இன்முகம் காட்டி அன்புடன் வர வேற்று ஆரத்தழுவி அகமகிழ்ந்தாள். கண்ணகி கல்நாட்டு விழா செங்குட்டுவன், கனக விசயரது முடிமேல் சுமத்திக் கொணர்ந்த கல்லச் சிற்பிகளைக் கொண்டு கற்பரசி கண்ணகியின் பொற்புறு வடிவமாகச் சமைக்குமாறு பணித்தான். நூலோர் குறித்த கன்னாளில் கண்ணகி யாகிய பத்தினிப் படிவம் காட்டப்பெற்றது. அவ் விடத்தில் அழகியதொரு கோவிலே அமைத்தான் செங் குட்டுவன். பத்தினித் தெய்வத்திற்குக் குடமுழுக்கு விழா கடத்த கன்னுள் குறிக்கப்பெற்றது. அவ் விழா விற்கு வருமாறு பன்னுட்டு மன்னர்க்கும் செங்குட்டு வன் அழைப்பு அனுப்பின்ை. கடல்சூழ் இலங்கைக்