பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கயவாகு மன்னனும் வடகாட்டு மன்னர் பலரும் விழா விற்கு வந்திருந்தனர். கண்ணகி கோயில் குடமுழுக்கு விழாச் சிறப்புற நடைபெற்றது. இஃது இங்கனமாகக், கோவலன் கொலேயுண்ட செய்தியை மாடலல்ை அறிந்த மாசாத்துவான் துறவு பூண்டான். அவனது பெருமனைக் கிழத்தி உயிர் துறந்தாள். கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கனும் துறவு பூண்டான். அவள் தாய் உயிர்நீத்தாள். மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் துறவு பூண்ட னர். இவற்றையெல்லாம் கண்டு எல்லேயற்ற துயருற்ற கண்ணகியின் செவிலித்தாயும், அடித்தோழியும், பார்ப் பனத் தோழியாகிய தேவந்தியும் ஆகிய மூவரும் கண்ணகியைக் காண விரும்பி மதுரைக்கு வந்தனர். அங்கு அவளேக் காணுது, அவளது சினத்தால் மதுரை. செந்திப் பற்றி எரிந்த செய்தி அறிந்தனர். கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி மகள் ஐயை என் டாளேக் கண்டனர். அடைக்கலப் பொருளே காக்க முடியாமல் உயிர் நீக்கிய மாதரியின் மறைவைத் தெரிந்து வருந்தினர். அவ் ஐயையை உடன் அழைத் துக் கொண்டு வையைக் கரைவழியே மலைநாடு நோக்கி நடந்தனர். திருச்செங்குன்று மலேமீது ஏறிக் கண்ணகி யின் கோயிலைக் கண்டனர். ஆங்குக் கண்ணகிக்கு விழா நடத்திச் சிறப்புற இருந்த செங்குட்டுவனே அம் மூவரும் கண்ணுற்றனர். அவனுக்குத் தங்களேப்பற்றி அறிவித்தனர். பின்னர்ப் பத்தினியை நோக்கி, அவளது பெற்ருேரும் உற்றேரும் உற்றநிலையை எடுத்துரைத்தனர். மாதரி மகள் ஐயை யைக் காட்டி அழுது அரற்றினர். அவ் வேளையில்