உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. கண்ணகியின் காவியக் கோவில் சேரர் பெருமானுகிய செங்குட்டுவன் வஞ்சிமா நகரில் பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குக் கற் கோவில் எடுத்துக் காவலர் பலர் சூழ வழிபட்டான். அவன் தம்பியாராகிய இளங்கோவடிகளோ உல கெலாம் நிலவி ஒளிவீசும் காவியக்கோவிலை அமைக்க உளங்கொண்டார். கண்ணகி கோவில் குடமுழுக்கு விழாச் சிறப்புற நடைபெற்று முடிவுற்ற பின்னர், ஒரு நாள் தமது இருக்கையாகிய குணவாயில் கோட்டத்தில் நண்பராகிய சாத்தனருடன் உரையாடிக் கொண்டிருந் தா. - அடிகள் தமது உரையாடலுக்கு இடையே கண்ண கிக்குக் காவியக் கோவில் அமைப்பது பற்றிய தம் கருத் தைப் புலப்படுத்தினர். 'கண்ணகியின் வரலாறு ஒன் பான் சுவைகளும் பண்புற அமைந்த உயர்வுடைய தன்ருே! உலகிற்குச் சிறந்த உண்மைகளைப் புலப் படுத்தும் ஒப்பிலாச் சிறப்புடையதன்ருே கற்பில் தவருத காரிகை, தெய்வமெனக் கொண்டாடும் திரு வுடையள் என்ற உண்மையை உலகில் கிலே நாட்டிய தன்ருே அறநெறி பிறந்த அரசரை அறக்கடவுளே ஒறுக்கும் என்பதை வலியுறுத்தியதன்ருே ஒருவன் செய்த வினை, அவனை விடாது வந்து பற்றிப் பயனுரட் டும் என்பதை நன்கு எடுத்துக் காட்டியதன்ருே இத் தகைய சிறந்த வரலாற்றை காமெல்லாம் கண்ணுரக் கானும் வாய்ப்பைப் பெற்ருேம். வருங்காலத் தமிழகம் இதனே அறிதல் வேண்டுமன்ருே இந்த மெய்ம்மை வரலாற்றை வையம் முழுதும் பரப்ப வேண்டிய பொறுப்பு நம்மைச் சார்ந்ததாகும். இது பற்றிய தும் கருத்து யாது ?" என்று வினவினர் இளங்கோ.