பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 அடிகளாரின் ஆர்வமிக்க உரையைக் கேட்ட சாத்த ஞர், அடிகளே ! கண்ணகி சோழ நாட்டில் பிறந்தாள். பாண்டிய நாட்டில் தன் கணவனே இழந்து கைம்மைக் கோலம் தாங்கினுள். சேரநாட்டில் தெய்வமாகச் சிறந்து விளங்கினுள். அவளது வாழ்வின் முதலும் நடுவும் இறுதியும் மூவேந்தர்களுடைய தலைநகரங்களிலேயே நிகழ்ந்தன. ஆதலின் முடிகெழு வேந்தர் மூவருடைய சிறப்புக்களும் அவளுடைய வரலாற்றில் தக்க இடம் பெறுதல் வேண்டும். அரசியற் செய்திகளை யெல்லாம் பிறப்பிலேயே உணர்ந்த பெருமை துமக்கே உள்ளது. ஆகையால் விேரே அக்காவியத்தை அமைத்தற்கு ஏற்ற அருந்திறல் படைத்தவர். யான் கோவலனுக்கும் மாத விக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாற் றைக் காவியமாக்குவேன்,' என்று மறுமொழி பகர்ந் தா. நல்லிசைப் புலவராகிய சாத்தளுரின் உள்ளத்தை அறிந்து மகிழ்ந்த அடிகளார், மேலும் கண்ணகி பற்றிய செய்திகள் பலவற்றை அவர் வாயிலாக அறிந்தார். பாண்டியன் நெடுஞ்செழியனது ஆட்சித் திறனையும் அவன் காலத்தில் மதுரைமாதகரின் மாட்சி நலனேயும் தெளிவுறக் கேட்டுத் தெரிந்தார். அக் காலத்திய சோழப் பேரரசின் சிறப்பையும் தலைநகராகிய புகார் நகரத்தின் பொற்பையும் தக்கார் வாயிலாகக் கேட் டுணர்ந்தார். தம் தமையனாகிய செங்குட்டுவன் பால் வடநாட்டுச் செலவைப்பற்றிய குறிப்புக்களை யெல் லாம் தொகுத்து வாங்கினர். இங்ங்னம் கண்ணகியின் காவியம் அமைத்தற்கு வேண்டிய செய்திகளே யெல்லாம் இளங்கோ விரைவில்