பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மொழிக்கண் நந்தா விளக்காக மிளிருவன காப்பியங்கள். அவை பல்வகை அறங்கள், நாடு ககர் பழக்க வழக்கப் பண்புகள், வரலாறுகள் முதலியனவற்றைப் புனேந்து உரைக்கும் பெற்றியனவாம். இக் காப்பியங்கள் பல்வகையின ; பல வர லாற்றைப் புனேந்துரைப்பன; அவையிற்றுள், தமிழ்கூறுகல்லுலகுக்கு முப்பெருங் காப்பி யத்தை ஆக்கித் தந்த பெரியார் மூவர்களின் வரலாற்றுண்மையையும் அவர்கள் செய்த காப்பிய வண்மையையும் சுருங்கிய முறையில் ஒருங்கே கிளப்பதே காவியஞ் செய்த மூவர் : என்னும் இவ் அரிய நூல். இம் மூவராவார், இளங்கோவடிகள், கூலவாணிகன்சாத்தனுர், சேக் கிழார் ஆகியோர். இவர்கள் முறையே ஆக்கிய காவியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் என்னும் மூன்றுமாம். இத்தகைய மூவர்களின் வரலாற்றையும், அவர்கள் செய்த காவியச் சிறப்பையும் மாண வரும் தெளிவாகத் தெரிந்து மகிழும் வண்ணம் எளிய இனிய செந்தமிழ்கடையில் எழுதியுதவி யவர் வித்துவான், திரு. அ. க. நவநீதகிருட்டிணன் அவர்கள். அவர்கட்குக் கழகத்தார் கன்றி.