பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பெரும்புலவர்கள் பலர் தாம் விரும்பும் சமயக் கொள்கைகளைத் தமது நூலில் பலவிடத்தும் விரித் துரைப்பர். அவர்கள் இயற்றும் நூல் தனிப்பட்ட சம யத்தைப் பற்றியதாக இருந்தால் அங்கனம் விரித் துரைப்பது குற்றமாகாது. உலகினர் அனைவர்க்கும் பயன்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் ஆக்கப்பெறும் நூல், குறிப்பிட்ட ஒரு சமய வயப்பட்டு விடுமாயின் ஆசிரியனது நோக்கம் நிறைவேருது : மணிமேகலை, சிந்தாமணி போன்ற காவியங்கள், தாம் விளக்கப் புகுந்த சமய உண்மைகளால் தனிப்பட்ட சமய நூல்களாகவே ஆய்விட்டன. சிலப்பதிகாரம் ஒன்றே, குறிப்பிட்ட ஒரு சமயத்தைச்சார்ந்தது என்று கூறமுடியாத வகையில் தன்னேர் இல்லாத தமிழ்க் காவியமாக விளங்குகிறது. - இளங்கோ சமணர் 'மதுரைக்கு வழி வாயிலே' என்ற பழமொழி வழங்கும் தமிழ்நாட்டில் புகார்ைவிட்டுப் புறப்பட்ட கோவலன், கண்ணகி ஆகிய இருவர்க்கும் மதுரைக்கு வழிகாட்ட ஒருவர் தேவையில்லே. என்ருலும் கவுந்தி யடிகள் என்னும் சமணப் பெண்துறவி அவர்களுடன் வழித்துணையாக வந்துகொண்டிருக்கிருள். அவள் வாயிலாகவே சமண சமய உண்மைகள் பலவற்றை இளங்கோவடிகள் அறிவுறுத்துகின்ருர். இங்ங்னம் புதியதொரு பாத்திரத்தைப் படைத்துக்கொண்டு, காவியத்தின் சுவை குன்ருத வண்ணம் சமயக் கருத்துக் களேப் புகுத்தி உரைக்கும் புலமைமிக்க அடிகளார் திறமை பெரிதும் போற்றற்கு உரியதாகும். இத் துறை யில் முழுவெற்றி கண்டவர் இளங்கோவடிகள் ஒருவரே என்று துணிந்து உரைக்கலாம்.