பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

李4 செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல்லெடுத்தற் பொருட்டு இமயம் நோக்கிப் புறப்பட்டபொழுது சிவ பிரான் சேவடி பணிந்து, வஞ்சிமாலே புனேந்து தனது பட்டவர்த்தனக் களிற்றின்மீது ஏறி அமர்ந்தான். அப் போது அவ் வஞ்சிமா நகரிலுள்ள ஆடகமாடம் என் லும் கோவிலின்கண் அறிதுயில் அமர்ந்த திருமாலின் பிரசாதத்தைச் சிலர் கொண்டுவந்து தந்தனர். 'தெண் னிர் கரந்த செஞ்சடைக் கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்' என்று இளங்கோவே குறிப் பிடுகின்ருர். ஆதலின் அவன் தம்பியாகத் தோன்றிய இளங்கோ சைவரே என்பர் சிலர். மேலும் சிவபெரு மானே முழுமுதற்கடவுள் என்பதை வலியுறுத்தப், பிறவா யாக்கைப் பெரியோன்' எனவும், உலகு பொதி உருவத் துயர்ந்தோன் எனவும் சிவனேச் சிறப்புறக் குறிப்பிடுகின்ருர். இத்தகைய பல காரணங்களால் இளங்கோ சைவ சமயத்தவரே என்பர் வேறு சிலர். திருச்செங்குன்று மலைமேல் வேங்கை மரத்தின் நிழலில் கின்ற கண்ணகியைக் கோவலன் தேவர்கள் சூழ விமானத்தில் ஏற்றி அழைத்துச் சென்ருன். அக் காட்சியைக் கண்ட மலைவாணர், கண்ணகியைத் தம் குலதெய்வமாகக் கருதி அவள் பொருட்டுக் குரவைக் கூத்து நிகழ்த்தினர். அப்போது மலேகாட்டுத் தெய்வ மாகிய குன்றுதோருடும் குமரவேளைப் பாராட்டிப்பண் னுடன் பாடுகின்றனர். அங்ங்னம் குன்றக்குறவர் பாடுவனவாக உள்ள பாக்கள் எல்லாம் முருகன் அருள் விளையாட்டுக்களை விளக்கும் பெருமையுடையனவாகும். 'சீர்கெழ செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏாகழம் நீங்கா இறைவன்கை வேலன்றே