பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சீரங்கத்தை அடைந்தனர். ஆங்கோர் சோலேக்கண் சமண் தருமம் சாற்றும் சாரணரைக் கண்டனர். அத் தரும சாரணரை மூவரும் அடிபணிந்து கின்றனர் அவர்கள் அருகன் பெருமையை வியந்து பேசினர். அறிவன் அறவோன் அறிவுவரம் பிகந்தோன் செறிவன் சினேந்திரன் சித்தன் பசவன் தரும முதல்வன் தலைவன் தருமன் பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள் விண்ணவன் வேத முதல்வன்.” - என்று பலவாறு பாராட்டிப் பகர்ந்தனர். அச் சாரணர் வாய்மொழி கேட்ட கவுந்தியடிகள் கைகளைத் தலை மேல் குவித்து அருகனை வழிபட்டாள். அருகர் அறவன் அறிவோற் கல்லதென் இருகையும் கூடி ஒருவழிக் குவியா, மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதேன் தலைமிசை உச்சி தானணிப் பொறுஅது." என்று பாடிப் பரவசமுற்ருள். இங்ஙனம் அருகனைக் குறிக்குமிடத்து இளங்கோவடிகள் சமணராகவே கின்று தனிமொழி பேசுகின்ருர். இவற்றை கோக்குங்கால் இளங்கோவடிகளைத் தனிப்பட்ட ஒரு சமயத்தவர் என்று துணிந்து கூற எவராலும் இயலாததாகவே இருக்கின்றது. எச்சமய உண்மைகளே எடுத்தியம்ப தேர்ந்தாலும், தாமும் அச் சமயத்தைச் சார்ந்தவராகவே கின்று ஆய்ந்துணர்ந்து பேசும் அடிகளாரின் திறம் வியப்பினும் வியப்பாகும். அவருடைய வாய்மொழி கொண்டு, அவரை எச்சமயத் தையும் சாாகதவர்ாக ஆக்குதல சாலாது. அவரைச் சமயப் பொதுகோக்குடைய சான்ருேர் என்று கொள் ளுதலே சாலப் பொருத்தமாகும்.