உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. சிலப்பதிகாரச் சிறப்பு முதல்தர இலக்கியம் ஆன்ருேர் நூல்களே மூன்று வகையாகப் பகுப்பர். சிலமணி நேரங்களே கற்றற்குரிய நூல்கள் ஒரு வகை : ஒருசில கால அளவே கற்றற்குரிய நூல்கள் மற்ருெரு வகை வாழ்நாள் முழுதும் ஒதியோதி உணர்ந்து இன் புறத்தக்க நூல்கள் இன்னொரு வகை. இம் மூவகை நூல்களுள் இறுதியில் குறிக்கப்பெற்ற வகையைச் சார்ந்த நூல்களே உறுதிபயக்கும் உயர்வுடையன வாகும். அவைகளேயே 'நவில்தொறும் கயங் தரும் கன் லூல்கள்' என்று பாராட்டலாம். ஆயுந் தொறுக் தொறும் இன்பம் தரும்தமிழ், தேருக்தொறும் இனி தாம் தமிழ் என்ற பாராட்டுக்குரிய நூல்கள் அத்தகை யனவே. அவைகளே முதல்தரமான இலக்கியங்கள். தமிழ்த்தாயின் திருவடிக்கு அணிசெய்யும் மணிச் சிலம்பாகிய சிலப்பதிகாரம் வாழ்நாள் முழுவதும் கற்று இன்புறத்தக்க கன்னித் தமிழ்க் காவியமாகும். சொற் சுவையும் பொருட்சுவையும் செறிந்து விளங்கும் செக் தமிழ்க் கருவூலமாகும். கற்குந்தோறும் மீண்டும் கற்க வேண்டும் என்ற விருப்பினை ஊட்டும் சிறப்புடைய தாகும். ஒதும்போதெல்லாம் உள்ளத்தில் புதுப்புதுச் சுவையை ஊட்டி நிற்பதாகும். இதேைலயே நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று பாரதி பாராட்டினர். பாயிரச் சிறப்பும் காவிய அமைப்பும் ஒரு நூலே இயற்றும் புலவன், தனது நூலேக் கற் பவர் கற்றற்குச் செலவிடும் காலத்தை வீணே கழியு மாறு செய்யான். அதற்காக அவர் செலவிடும் காலம் அவரது வாழ்நாளின் ஒரு பகுதியாதலின், அது தக்க