பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} நூலின் முதற்பிரிவாகிய புகார்க்காண்டம் கண் னகியின் மனேயற வாழ்வைக் குறிப்பதாகும். இரண் டாவது பிரிவாகிய மதுரைக்காண்டம் அவள் கணவனே இழந்து கைம்மைக்கோலம் தாங்கிய அவல கிலேயை விளக்குவதாகும். மூன்ருவது பிரிவாகிய வஞ்சிக்கான் டம் அவள் தெய்வமாகத் திகழ்ந்த சிறப்பைக் குறிப்ப தாகும். புகார் என்று பெயர்பெற்ற காவிரிப்பூம்பட்டி னத்தில் அவள் கோவலனை மணம்புரிந்து வாழ்வைத் தொடங்கினுள். மதுரைமாநகரில் தன் கணவனே இழந்தாள். வஞ்சிமாநகரில் கோவில் எடுத்துக்கொண் டாடும் தெய்வமானுள். இத்தகைய பத்தினித்தெய்வத் தின் வரலாற்றில் தமிழ்நாட்டின் முடிமன்னர் மூவரும் தக்க இடம் பெறுகின்றனர். புகார்க் காண்டத்தில் சோழன் பெருமை சொல்லப்படுகிறது. மதுரைக் காண்டத்தில் பாண்டியன் பெருமை பகரப்படுகிறது. வஞ்சிக்காண்டத்தில் சேரன் பெருமை கூறப்படுகிறது. ஆசிரியர் இளங்கோவடிகள் தாம் சேரமரபினைச் சேர்ந்தவராயினும் சிறந்த புலமைகலம் கனிந்த துய துறவியாராதலின் நடுவுகிலே பிறழாது மன்னர்களைப் பாராட்டுகின்ருர். தமிழர்க்கே உரிய உயர்ந்த பண்பாடு. களே உரைக்கின்ருர். பழந்தமிழர் மேற்கொண்டு இழு கிய சமயங்களைப் பற்றியெல்லாம் விருப்பு வெறுப்பின் றிக் குறிப்பிடுகின்ருர். எச்சமயத்தவரும் ஏத்தி வணங் கும் பத்தினித் தெய்வத்தின் வரலாறு என்பதை நன்கு உணர்ந்து, தமது காவியத்தைப் பண்புற அமைத்துள் ளார். இவைபோன்ற பல சிறப்புக்களைக் கொண்ட சிலப்பதிகாரம் இணையற்ற தமிழ்க்காவியமாகும்.