உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ருடன் சேர்த்துச் சீத்தலைச் சாத்தனர் என்று உரைப் பாராயினர். சீத்தலே என்பது ஊர்ப்பெயர் என்று உணராத ஒரு சிலர் சீழ்ப்பிடித்த தலே' என்று பொருள் கொண்டு, அதற்கேற்பக் கதையொன்றும் கற்பனை செய்து அமைத்து வைத்தனர். கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவராக விளங்கிய சாத்தனர் சொற்குற்றம் பொருட்குற்றம் உள்ள பாக் களே நோக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் உள் ளம் வருந்துவராம். அப்போது தம் கையில்இருக்கும் எழுத்தாணியைக் கொண்டு, தம் தலையில் குத்திக் கொள்வாராம். அதல்ை தலையில் புண் ஏற்பட்டு எப் போதும் சீழ் வடிந்து கொண்டிருக்குமாம். அங்ங்னம் சீழ் வடியும் தலேயினராய் விளங்கிய புலவரைச் சீத்த லைச் சாத்தனர் என்று குறித்தனர் என்பர். சங்கத்துச் சான்ருேருள் ஒருவராய்த் திகழ்ந்த மருத்துவன் தாமோதரனர் என்னும் புலவர், சாத்த ரிைன் ஆருயிர்நண்பராய் விளங்கிவந்தார். அவர் சாத்த குரைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்று திருவள்ளுவ மாலேயில் உள்ளது. அதனே ஆதாரமாக வைத்துக் கொண்டே சீழ்த் தலேயர் சாத்தனர்' என்ற கதை கட்டப்பட்டது. அப் பாடலே மற்ருேர் உண்மையைக் கற்ருேர்க்குப் புலப்படுத்துவதாகும். தமிழ்ச் சங்கம் தழைத்தோங்கிய பண்டை நாளில் தமிழகத்தில் தோன் றும் நூல்கள் எல்லாம் சங்கத்தில் அரங்கேறிய பின் னரே நாட்டில் உலவலாம். நாட்டிற்குப்பயன் தராதன வாயும் கேட்டை விளேப்பனவாயும் அமைந்த நூல் களேச் சங்கத்தில் அரங்கேற்றவே இடங்கொடார். அங் கனம் அரங்கேற வரும் நூல்களின் தகுதியைக் கண்டு