உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 னேக் காண வந்த மலைவாணர்கள், தாம், வேங்கை மரத் தின்ழேலில் கண்ட கண்ணகியைப் பற்றிய வியத்தகு நிகழ்ச்சியைச் சொல்லக் கேட்டார். அதன் உண்மை அறியாது திகைத்திருந்த சேரர் பெருமானுக்குச் சாத்த ர்ை மதுரைமாநகரில் தாம் நேரில்கண்ட செய்தி அனைத்தும் தெளிவுற உரைத்தார். உடனிருந்து அச் செய்திகளே நுட்பமாகக் கேட்டு உணர்ந்த இளங்கோ வடிகள், கண்ணகியின் வரலாற்றைக் காவியமாக்கினர். சாத்தளுர் பாடியவை இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் காவியம் செய் தற்கு வேண்டும் குறிப்புகளை யெல்லாம் தொகுத்துக் கொடுத்த சாத்தனர் தலைமையிலேயே அடிகளார் காவி யத்தை அரங்கேற்றினர். அதன் பின்னர்ச் சாத்தனர், கோவலனுக்கும் அவன் காதற் கணிகையாகிய மாதவிக் கும் பிறந்த மகள் மணிமேகலையின் வரலாற்றை அணி தரு காவியமாக அமைத்தருளினர். இக் காவியத்தை அன்றிச் சாத்தனரால் பாடப்பெற்ற தனித்தனிப் பாக் கள் பத்து உண்டு. அவைகள் சங்க இலக்கியங்களுள் இடம் பெற்றுள்ளன. புறநானூற்றில் இவர் கன்மாற னப் பாடிய பாடல் ஒன்று உள்ளது. அகநானூற்றில் இவரின் பாக்கள் ஐந்து இடம்பெற்றுள்ளன. நற்றிணை யில் மூன்றும் குறுந்தொகையில் ஒன்றும் இவருடைய பாக்களாகக் காணப்படுகின்றன. புறநானூற்றுப் பாடலே ஒழிந்த ஒன்பது பாக்களும் அகத்துறையைச் சார்ந்தனவாகும்.