63 உரையாசிரியர்களும் மணிமேகலை அடிகளேத் தத்தம் உரைகட்கு அரண்செய்ய எடுத்தாளுகின்றனர். இஃ தொன்றே அந் நூலின் ஏற்றத்திற்குத் தக்க சான்ருகும். மணிமேகலை நூல் நுட்பங்களில் மனத்தைப் பறி கொடுத்தவர் பலர். அவருள் கற்பனைக் களஞ்சியம் என்று கற்றவர் போற்றும் கற்றவச் செல்வராகிய சிவப் பிரகாச முனிவர் தாம் அருளிச்செய்த திருவெங்கைக் கோவை என்னும் இனிய நூலில் உள்ள பாடலொன் றில் மூன்று நூல்களைப் பாராட்டுகின்ருர். அவற்றுள் மணிமேகலை முதலிடம் பெறுவதாகும். அவர் இக் நூலின் சொற்பொருள் நுட்பங்களை வியந்து போற்று கின்ருர். அவரால் பாராட்டப்பெற்ற மற்றைய இரு நூல்கள் சிந்தாமணியும் திருக்கோவையாரும் ஆகும். இவ் இருநூல்கட்கும் அமைந்த உரைகலத்தையே சிவப் பிரகாசர் வியந்துரைத்தார். ஆனல் மணிமேகலையை மிகவும் நுட்பம் வாய்ந்த நூலெனப் போற்றினர். கொந்தார் குழல்மணி மேகலை நூல்நுட்பம் கொள்வதேங்கன் என்பது அவரது பாடல் அடியாகும். அம்பிகாபதி என்னும் அருந்தமிழ்ப் புலவர், தாம் பாடிய அம்பிகாபதிக்கோவை என்னும் நூலில் மாதவி பெற்ற மணிமே கலநம்மை வாழ்விப்பதே என்று பாராட்டினர். திருத்தணிகை உலாப் பாடிய ஆசிரியர், சிந்தா மணியம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்த மணிமே கலைபுனைந்தான்.” என்று பாடித் தமிழிலுள்ள முப்பெருங்காவியங்களைப் போற்றினர். இப் புலவர்கள் எல்லாம் மணிமேகலை நூற்பெயரைத் . தொனியம் இ ான்றத் தத்தம்
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/71
Appearance