உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாக்களில் அமைத்தாலும் அதன் அருமைப்பாட்டை அறிந்தே பெருமையுறப் போற்றினர். இத்தகைய மணிமேகலைக் காவியம் முதற்கண் பதிகம் என்று வழங்கப்படும் கதைபொதிபாட்டைப் பெற்றுள்ளது. விழாவறை காதை முதலாகப் பவத் திறம் அறுகெனப் பாவை கோற்ற காதை இறுதியாக முப்பது பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இங்ங்னம் நூலே வகைப்படுத்து அமைத்த ஆசிரியராகிய சாத்த ஞர், தம் நண்பராகிய இளங்கோவடிகளைத் தலைமை யாகக் கொண்ட பேரவையிலேயே இந் நூலை அரங் கேற்றினர். இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ட வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனன்.” என்று சாத்தனரே அச் செய்தியைச் சாற்றுகின்ருர் டு. மணிமேகலை வரலாறு மாதவி துறவு சோழ வளநாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் பிறந்தவன் கோவலன். அவன் ஆடல், பாடல், அழகு ஆகிய மூன் றினும் சிறந்த நாடகக் கணிகையாகிய மாதவியிடம் காதல் பூண்டு ஒழுகினன். கற்பரசியாகிய கண்ணகி என்னும் காதல்மனேயாளே மறந்து மாதவியின் மனே யிலேயே அவன் தங்கிவிட்டான். இத்தகைய கோவல னுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளே மணிமேகலை யாவள்.