65 ஊழ்வினையால் மாதவியைப் பிரிந்த கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியுடன் மதுரைமாககரை அடைக் தான். ஆங்குச் சிலம்பு விற்கச் சென்ற வேளேயில் அரண்மனைப் பொற்கொல்லன் சூழ்ச்சியால் கள்வன் என்று குற்றம் சாற்றப் பெற்ருன். பாண்டியல்ை கொலைத்தண்டனை விதிக்கப் பெற்று இறந்தான். அவன் இறந்த செய்தியைத்தெரிந்தமாதவி தனதுசெல்வத்தை எல்லாம் தானம் செய்து தவக்கோலம் பூண்டாள். மாதவர் வாழும் தவச்சாலேயை அடைந்தாள். ஆங் கிருந்த அறவண அடிகளின் அடிமிசை விழுந்து வணங் கிள்ை. அவர்பால் தன் காதலகிைய கோவலன் மதுரை மாநகரில் அடைந்த கொடுந்துயரைக் கூறி வருந்திள்ை. அறவணர் அறவுரை மாதவியின் துயரைக் கேட்ட மாதவராகிய அற வன அடிகள், பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது, பின்னது அற்றேர் உறுவது அறிக. ’ என்று கால்வகை வாய்மைகளையும் அவளுக்கு அருளி: செய்தார். துக்கம், துக்க நிவாரணம், துக்கோற்ப, துக்க நிவாரண மார்க்கம் என்னும் அக் கா: வாய்மைகளையும் அறிவுறுத்திய அடிகள், காம கொலே, கள், பொய், களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தலாகிய ஐவகைச் சீலங்களையும் அட் மாதவிக்கு அறிவுறுத்தினர். இங்ங்னம் அறவண அடிகளிடம் கால்வகை வாய் மையும் ஐவகைச் சீலமும் ஆகிய அறவுரை கேட்ட கா. மூ-5
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/73
Appearance