பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மாதவி தன் மகளாகிய மணிமேகலையுடன் புகார்நகரத்தி லுள்ள மலர் மண்டபத்தில் புகுந்து தூய துறவற வாழ்வைத் தொடங்கிள்ை. காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா வந்துற்றது. விழாக் காலத்தில் மாதவியும் மணிமேகலையும் தங்கள் ஆடல் பாடல்களால் நகர மாந்தர்க்கு கல்விருந்து ஊட்டுவர். இவ்யாண்டில் அவர்கள் விழாவில் கலந்து கொள்ளாமையைக் கண்ட ஊரினர் அலர் துாற்றினர். ஊரலர் உரைத்தல் மாதவியின் தாயாகிய சித்திராபதி ஊரினர் தூற்றி உரைக்கும் அலர்மொழி கேட்டு உள்ளம் வருந்தினுள். மாதவியின் தோழியாகிய வயந்தமாலையை அழைத்து, “ஊரார் கூறும் பழிமொழியை மாதவிக்கு உரைப்பாய் என விடுத்தாள். வயந்தமாலே, மாதவி இருந்த மலர் மண்டபத்தை அடைந்து, அவளது தவத்தால் மெலிந்த மேனியைக் கண்டு வருந்தினுள். அவள் இந்திரவிழா வில் கலந்து கொள்ளாதது குறித்தும், மரபிற்கு ஒவ் வாத தவவொழுக்கம் பூண்டது குறித்தும் ஊரார் பழித்து உரைப்பனவற்றை எடுத்துரைத்தாள். வயந்தமாலேயின் சொற்களைக் கேட்ட மாதவி, * காதலன் உற்ற கடுந்துயர் கேட்டும் இறவாது உயிர் வாழ்ந்தேன் மதுரை மாநகரை எரித்த மாபெரும் பத்தினியாகிய கண்ணகியின் மகளன்ருே மணிமேகலை : அவளேயும் தவத்தில் செலுத்துவேனே அல்லாமல் இழிந்த பரத்தைமைத் தொழிலில் புகுத்தமாட்டேன்; அறவண அடிகளிடம் அறவுரை கேட்டுத் துறவறம் புகுந்தேன் இச் செய்தியை என் தாய்க்கும் ஏனைய மகளிர்க்கும் இயம்புவாய் ' என்று சொல்லி அனுப்பி