69 முன். அதன் பின்னர்ப் பளிக்கறையினின்று வெளிப் போந்த மணிமேகலை, தன் தோழியாகிய சுதமதியை நோக்கி, உதயகுமரன் என்னப் பலவாறு இகழ்ந்து உரைத்தாயிைனும் அவன் பின்னே என்நெஞ்சு செல்ல லுற்றது. இதுவோ காமத்தின் இயற்கை. இத் தன்மை கெடுவதாக,' என்று சொல்லி கின்ருள். - மணிமேகலா தெய்வம் தோன்றுதல் இவ்வேளையில் இந்திரவிழாவைக் காண வந்த மணி மேகலா தெய்வம் உவவனத்தை அடைந்தது. ஆங்குப் பளிக்கறையில் உள்ள பாத பீடிகையை வலங்கொண்டு பலவாறு வாழ்த்தி நின்றது. இங்கிலேயில் பகற்பொழுது கழிய அந்திமாலே வந்தடைந்தது. சிறிது நேரத்தில் திங்கட்செல்வன் எங்கனும் தண்ணிலவைப்பொழியத் தலைப்பட்டான். பின்னர் அம் மணிமேகலா தெய்வம் சுதமதியிடத்தே மணிமேகலையுடன் வனத்திற்கு வந்த காரணத்தையும் உற்ற துன்பத்தையும் கேட்டு அறிந் தது. உதயகுமரனுக்கு மணிமேகலையால் எழுந்த வேட்கை தணிந்திலது. இது முனிவர் உறையும் வன மென்பதை அறிந்து தீங்கு செய்யாது அகன்ருன். இதனைக் கடந்து வெளிப் புகுந்தால் அவன் அகப்படுத் திக் கொள்வான். ஆதலின் விேர் இருவரும் இவ் வனத் தின் மேற் றிசை உள்ள வாயில் வழியே சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்க,' என்று சொல்லியது. உதயகுமரனுக்கு அறிவுரை அது கேட்ட சுதமதி, சுடுகாட்டுக்கோட்டம் எனப் படும் அதனைக் சக்கரவாளக் கோட்டம் என வழங்கு தற்குக் காரணம் யாது? என அத் தெய்வத்தை வினவி ள்ை. மணிமேகலா தெய்வம் அதன் வரலாற்றைச்
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/77
Appearance