70 சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் சுதமதி உறங்க ஆற்ருள். உடனே அத் தெய்வம் மணிமேகலையை மயக்கி எடுத்துச் சென்று மணிபல்லவத் தீவில் கொண்டு சேர்த்தது. பின்பு அங்கிருந்து நீங்கிக் காம வேட்கையால் இரவு முழுதும் துயிலாதிருந்த உதய குமரனே அடைந்தது. அவன்முன் தோன்றி அரசு முறையின் இயல்பை அறிவுறுத்தியது. - கோல்நிலை திரித்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூகும் மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை மன்னுயிர் எல்லாம் மண்ணுள் வேந்தன் தன்னுயி என்னும் தகுதியின் றகும்.' இங்ங்னம் அரசியல் முறையினே எடுத்தியம்பிய மணிமேகலா தெய்வம், தவத்திறம் பூண்ட மணி மேகலையின் மீது கொண்ட தவருண எண்ணத்தை ஒழிப்பாய்,' என்று உரைத்தது. சுதமதிக்குச் செய்தி பின்னர் அத் தெய்வம் உவவனத்தை அடைந்து ஆங்குத் துயின்று கொண்டிருந்த சுதமதியை எழுப்பி, 'யான் மணிமேகலா தெய்வம்; இந்திரவிழாக் காணு தற்கு வந்தேன். மணிமேகலை அறநெறியில் புகும் நற் பொழுது வந்தமையால் அவளே எடுத்துச் சென்று மணிபல்லவத்தில் வைத்தேன். அவள் தனது பழம் பிறப்பை உணர்ந்து இற்றைக்கு ஏழாம் நாள் இங்கு வந்து சேர்வாள். அவள் வேறு வடிவம் கொள்வா ளாயினும் கினக்குத் தன்னை மறைக்க மாட்டாள். அவள் இந் நகரில் புகும் நாளில் பற்பல அற்புதங்கள் நிகழும். இச் செய்திகளை அவள் தாயாகிய மாதவிக்குக்
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/78
Appearance