உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 கூறுக. அவட்கு என்னத் தெரியும்,' என்று சொல்வி அகன்றது. மணிமேகலையைப் பிரிந்து வருந்தல் மணிம்ேகலேயின் பிரிவுத் துயரைப் பொருத சுதமதி அச் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள உலக வறவியின் அருகே கின்று வருந்திக் கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கிருந்த துரணில் துலங்கிய தெய்வப் பாவை யொன்று சுதமதியை விளித்து, அவளது பழம்பிறப்பு, இப் பிறப்பு வரலாறுகளை எடுத் துரைத்தது. மேலும், இன்றைக்கு ஏழாம் நாளில் மணிமேகலை தனது முற்பிறப்பையும் உனது முற். பிறப்பையும் அறிந்து திரும்புவாள். நீ அஞ்சாதே" என்று ஆறுதல் கூறியது. அதனேக் கேட்டு இதயம் நடுங்கிய சுதமதி, கதிரவன் உதித்ததும் மாதவியிருந்த மலர்மண்டபத்தை அடைந்தாள். முதல்நாள் இரவில் நிகழ்ந்தவற்றையெல்லாம் அவளிடம் மொழிந்தாள். மணிமேகலையைப் பிரிந்த மாதவி மணி இழந்த நாகம் போல் வருந்தி இருந்தாள். சுதமதியோ உயிரிழந்த உடம்பைப்போல் செயலற்றுத் துயருற்று இருந்தாள். மணிபல்லவத்தில் மணிமேகலை மணிபல்லவத்தே தனியே துயின்ற மணிமேகலை, விழித்தெழுந்தாள். அவள் தான் இருக்கும் இடம் வேற்றிடமாதலே அறிந்து, பிறிதோர் இடத்துப் பிறந்த உயிர் போன்று பேதுற்ருள். இஃது உவவனத்தின் ஒருபுறமோ!' என்று எண்ணி அங்கும் இங்கும் அலேந்து திரிந்தாள். தோழியாகிய சுதமதியைக் காணுது கலங்கிக் கதறினுள். தன் தந்தையாகிய கோவ லனே நினைந்து ஐயாவோ ! என்று அலறியழுதாள்.