74. புரிவாய்” என்று வாழ்த்தினள். மணிமேகலை, அவளை வணங்கிப் புத்த பீடிகையை வலங்கொண்டு, அமுத சுரபியுடன் வானில் எழுந்து புறப்பட்டாள். புகார் நகரம் புகுதல் வான்வழி எழுந்த மணிமேகலை, புகார் நகரில் தன்னைக் காணுது வழிமேல் விழிவைத்து எதிர்நோக்கி இருக்கும் சுதமதியும் மாதவியும் வியப்படையுமாறு, அவர்கள் முன்னர்த் தோன்றிள்ை. அவர்களது முற் பிறப்பைப் பற்றி அறிவித்தாள். இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் தெய்வப் பாத்திரம்; இதனைத் தொழுமின்,' என்று இயம்பினள். அவர்க ளுடன் அறவண அடிகளேக் கண்டு தரிசித்தாள். அவள், தான் மலர்வனம் புகுந்தது முதல் இதுகாறும் கிகழ்ந்த அனைத்தும் அவரிடம் உரைத்தாள். பின்பு, அறவண அடிகள் மணிமேகலைக்கு மாதவி, சுதமதி ஆகிய இருவருடைய முற்பிறப்பு வரலாற்றைத் தெரிவித்தார். நீ இவ் அமுதசுரபியைக் கொண்டு மக்களது பசிப்பிணி தீர்க்கும் சீரிய பேரறத்தைச் செய்க!” என்று வாழ்த்தி, ஆபுத்திரன் வரலாற்றையும் அறிவித்தார். ஆதிரை பிச்சையிடல் அது கேட்ட மணிமேகலை பிக்குணிக் கோலம் தாங்கிப் பெருவீதி வழியே நடந்து வந்தாள். அவளது கோலத்தைக் கண்ட நகர மாந்தர் உள்ளம் குழைந்த னர். அவள் செல்லும் வழியில் காயசண்டிகை என்னும் விஞ்சைமகள் ஒருத்தி எதிர்ப்பட்டாள். அவள் மணிமேகலையை அணுகி, இந் நகரில் ஆதிரை என்னும்
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/82
Appearance