75 கற்புடையாள் பொற்கரத்தால் முதன்முதல் பிச்சை யேற்றல் கன்று' என்று கவின்ருள். அங்ஙனமே மணி மேகலே, ஆதிரையின் அணிமனை அடைந்து புனேயா ஒவியம் போல வாய் பேசாமல் கின்ருள். ஆதிரை வெளிப் போந்து மணிமேகலையைத் தொழுது வலம் வந்தாள். அவள் கையமர்ந்த அமுதசுரபியின் உள் ளிடம் கிறைய, பாரகம் அடங்கலும் பசிப்பிணி அலுக." என்று வாழ்த்தி ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை இட்டாள். காயசண்டிகையின் பசிப்பிணி தணித்தல் ஆதிரை கல்லாள் அன்புடன் அளித்த பிச்சையை அமுதசுரபியில் முதற்கண் ஏற்ற மணிமேகலை, அத னின்று எடுக்க எடுக்கக் குறையாத அன்னத்தை ஏற்ப வர்க்கெல்லாம் இனிது வழங்கிள்ை. அறநெறியில் தேடிய செல்வம் வழங்குந்தோறும் குறையாமல் வளர் வதுபோல அமுதசுரபியில் அன்னம் பெருகுவது கண்டு பேருவகை கொண்டாள். இதனைக் கண்ணுற்ற காய சண்டிகை என்னும் விஞ்சை மகள் மணிமேகலையைத் தஞ்சம் புகுந்தாள். தாயே பல்லாண்டுகளாக எனக்கு ஏற்பட்டுள்ள தணியாத பசியையும் தணித்தருள்க’ என்று மணிமேகலையை வணங்கி வேண்டினுள். உடனே மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒரு பிடி அமுதை எடுத்து அவள் கையில் கொடுத்தாள். அதன. உண்டதும் காயசண்டிகை என்றும் திராக் கடும்பசி தீர்த்தாள். மணிமேகலைக்குத் தனது வரலாற்றை உரைத்து உளங்குளிர வாழ்த்தினுள்.
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/83
Appearance