77 மாற்றி, அவளேப் பன்னளாக விரும்பும் மன்னன் மகன் உதயகுமரன் தேரில் ஏற்றி வருவேன்," என்று அவள் தன் குல மடந்தையரிடம் உறுதி கூறிப் புறப் பட்டாள். உதயகுமரனேக் கண்டு, மணிமேகலை உலக வறவியில் தங்கியுள்ள செய்தியை உணர்த்தினுள். சித்திராபதியின் மாய மொழிகளால் மனம் மாறிய உதயகுமரன் தேரேறி உலகவறவியைச் சார்ந்தான். மணிமேகலையைக் கண்டு, நீ தவக்கோலம் தாங்கிய தற்குக் காரணம் யாது?’ என்று வினவினன். மணி மேகலே பழம்பிறப்பில் உதயகுமரன் தனக்குக் கணவ கை இருந்ததை கினேந்து வணங்கிள்ை.
- பிறத்தலும் முத்தலும் பிணிப்பட் டிரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்.? என்று மறுமொழி பகர்ந்து, ஆங்கிருந்த சம்பாபதியின் கோயிலுள்ளே புகுந்தாள். பின்பு அங்கிருந்து தனது மந்திர வன்மையால் காயசண்டிகை வடிவு கொண்டு அமுதசுரபியைக் கையிலேந்தி வெளிவந்தாள். மணிமேகலை வேற்றுருக் கொண்டு வெளிவந்ததை உணராத உதயகுமரன் சம்பாபதித் தெய்வத்தை வணங்கி, மணிமேகலையைக் காட்டியருளுமாறு பாடு கிடந்தான். அப்போது அங்கு விளங்கிய சித்திரத் தெய்வம் ஒன்று உதயகுமரன் கேட்குமாறு, 'நீ எம் தேவியின் முன்னர் ஆராயாது குளுறவு கூறிய்ை ; அதல்ை சிறிதும் பயனில்லை," என்று பகர்ந்தது. அவ் உரையைக் கேட்டு உள்ளம் வருந்திய உதயகுமரன் வியப்பும் திகைப்பும் உற்றவய்ை அரண்மனை அடைக் - தான். - -