உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மணிமேகலையின் பேராற்றலைக் கண்டு வியந்த பெருங்தேவி, அவளே நோக்கி, மகனே இழந்த பெருந் துயர் பொறுக்கலாற்ருது இத் தீங்குகளைச் செய்தேன்; இவற்றைப் பொறுத்தருள வேண்டும்,' என்று வேன் டினுள். அரசியின் தெளிவைக் கண்ட மணிமேகஇ அவட்கு அறவுரை பகர்ந்து அருளுடன் அவளைத் தேற்றினுள். உடற்கழ தனையோ உயிர்க்கழ தனையோ உடற்கழ தனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே உயிர்க்கழ தனேயேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது அவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இசங்கல் வேண்டும்.? என்று அரியதொரு பொருளுரை பகர்ந்தாள். இங்ங்னம் மணிமேகலே தனது ஞானமாகிய நீரை இராசமாதேவியின் செவியில் வார்த்தாள். அவளது துயரமாகியநெருப்பினே அங்ரோல் அவித்தாள். அதனல் உள்ளம் தெளிந்த கோப்பெருந்தேவி, மணிமேகலையை வணங்கிள்ை. அவள் அதனைப் பொருளாகித் தானும் அரசியை வணங்கிள்ை. மணிமேகலை ஆபுத்திரன்நாடு அடைதல் இவ் வேளையில் சித்திராபதி இராசமாதேவியை நெருங்கி மணிமேகலையைத் தன்னுடன் அனுப்புமாறு வேண்டினள். இராசமாதேவி அதற்கு இசையாது மறுத்துரைத்தாள். அதே சமயத்தில் மணிமேகலையை மீட்டற்கு அறவணவடிகள், மாதவி, சுதமதி இருவருட லும் ஆங்கு வந்துற்றனர். இராசமாதேவி அடிகளின் திருவடிகளே இறைஞ்சிள்ை. அவர் அவட்கு அறவுரை