உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 யருளி, மணிமேகலையை நோக்கி, நீ பல்வேறு இடங் கட்குச் சென்று நல்லறங்களைக் கேட்டுத் திரும்புக,' என்று சொல்லி விடையளித்தார். மணிமேகலையும் அவ்விடத்தினின்று நீங்கி வான்வழியே ஆபுத்திரன் புண்ணியராசய்ைப் பிறந்து ஆட்சி புரியும் காட்டை அடைந்தாள். - ஆபுத்திரன் காட்டை அடைந்த மணிமேகலை அங் கிருந்த தருமசாவகன் என்னும் தவமுனிவனது இருக்கையில் தங்கிள்ை. அங்கு வந்த புண்ணியராசன் தவச்சாலையில் இருந்த மணிமேகலையைப் பற்றித் தெரிக் தான். அவள் அவ்வரசனது பழம்பிறப்பை அவனுக்கு விளங்க உரைத்தாள். 'கின் கையிலிருந்த அமுதசுரபியே என் கையில் புகுந்தது; உன் பழம்பிறப்பை அறிய என் னுடன் மணிபல்லவத்திற்கு வருக,' என்று சொல்லி மணிமேகலை வான்வழியே மணிபல்லவம் சென்று தரும் பீடிகையை வணங்கி நின்ருள். - மணிமேகலை வஞ்சிமாநகர் புகுதல் சின்னுட்களில் புண்ணியராசன் மணிபல்லவத்தை வந்து கண்ணினன். அவனே மணிமேகலை எதிர் கொண்டு வரவேற்றுத் தரும பீடிகையைத் தரிசிக்கு மாறு செய்தாள். அவன் அதனை வணங்கித் தன் பழம் பிறப்பைத் தெரிந்து மகிழ்ந்தான். அப்பொழுது அங்குத் தோன்றிய திவதிலகை காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்ட செய்தியையும், மாதவி, சுதமதி, அற வணர் ஆகியோர் வஞ்சிமாநகர் சென்று சேர்ந்த செய் தியையும் மணிமேகலைக்குத் தெரிவித்தாள். அது கேட்ட மணிமேகலை, பிரியமாட்டாது வருந்தும் புண் னிையராசனத் தேற்றி, அவனது காட்டிற்கு ஏகுமாறு