85 இன்னல் களைந்தாள். இவளது அறச்செயல் நாடெங் கும் பரவியது. அதனை உணர்ந்த அறவணவடிகளும் மாதவியும் சுதமதியும் மணிமேகலை இருந்த அறச் சாலைக்கு வந்தனர். அவர்களை மணிமேகலை மகிழ்ச்சி யுடன் வரவேற்று உணவளித்து உபசரித்தாள். அற வண அடிகளேப் பணிந்து, புத்தன் அருளிய புத்தமு தாம் மெய்யறத்தைச் சித்தம் தித்திக்குமாறு உபதே சிக்க வேண்டினள். அவர் புத்த சமய உண்மைகளைச் சித்தம் கொள்ளுமாறு மணிமேகலைக்கு அறிவுறுத் தினர். • பவமறத் தவம்புரிதல் - அறவண அடிகளின் அருளுரை கேட்ட மணி மேகலை அவர் திருவடிகளே வணங்கி நின்ருள். அவர் புத்தர் பிரானின் புண்ணிய வரலாற்றை உரைத்தருளி, 'கின் அகவிருள் அகல்வதாக என்று வாழ்த்தினர். மணிமேகலை, அவர் காட்டிய ஞான விளக்கின் துணை கொண்டு, தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு, இப்பவத் திறம் அறுவதாக என்று அங் நகரிலேயே தவம் செய் திருந்தாள். இம் மணிமேகலை, வள்ளுவர் சொல்லிய தவத்தின் இலக்கணமாகிய, "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு.” என்ற வாய்மொழிக்குத் தக்க சான்ருய்த் திகழ்ந்தாள். சு. மணிமேகலையில் ஒளிரும் மணிகள் சீத்தலைச் சாத்தனர் செந்தமிழ்த் தாயின் சிற்றிடை யினே அணி செய்யும் மேகலையாக அமைத்தருளிய மணி மேகலைக் காவியத்தில் சுடர் வீசும் மணிகளைப் போன்று பல அறங்கள் சொல்லப்படுகின்றன. காவியத் தலைவி
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/93
Appearance