பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 வினையின் வந்தது வினைக்குவிளை வாயது புனைவன நீங்கின் புலால்புறத் திடுவது முப்பு விளிவுடையது தீப்பிணி இருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றடங் காவில் செற்றச் சேக்கை அவலக் கவலை கையா நழங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது மக்கள் யாக்கை இது..? 'வினைப்பயல்ை வந்த இவ் உடம்பு வினைக்கே விளைநில: மாக உள்ளது. மணந்தரு பொருள்களால் புனையப்பட வில்லையாயின் புலால் நாற்றம் வீசுவது. முதுமையுற்று அழியும் இயல்புடையது. பொல்லாத கோய்கட்கும் பொருந்தாத பற்றுக்களுக்கும் புகலிடமானது. அரவு அடங்கும் புற்றைப் போலச் செற்றத்திற்கு உறைவிட மானது. அவலம், கவலை, கையாறு, அழுங்கல் ஆகிய நான்கும் அகலாத உள்ளத்தைத் தன்னிடத்தே உடை யது. இத்தகைய இழிந்த உடம்பின்மீது நினக்கு இத் துணேக் காதல் எழுவானேன்?” என்று சுதமதி சொல் லிய நல்லற உரைகள், மக்கள் யாக்கையின் இழிநிலை யைத் தெளிவுற விளக்குவனவாகும். உவவனத்தினின்று நீங்கிய உதயகுமரன் இரவுப் பொழுது முழுதும் துயிலாது, மணிமேகலையைப் பற்றியே எண்ணி ஏங்கிக்கொண்டிருந்தான். அவன் முன்னர் மணிமேகலா தெய்வம் தோன்றி, அரசியலேப் பற்றிய அறவுரையைக் கூறியது. தவத்திறம் பூண்ட மணிமேகலேபால் கொண்ட காதல் தவறுடையதாகும் என்று அறிவுறுத்தியது. அரசன் மகளுகப் பிறந்து, இத்தகைய அவச்செயல் புரிதல் தக்கதன்று என்று இடித்துரைத்தது.