உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை மன்னுயிர் எல்லாம் மண்ணுள் வேந்தன் தன்னுயிர் என்னும் தகுதியின் றுகும்.’ என்று சிறந்த அரசியல் அறத்தை எடுத்துரைத்தது. மணிபல்லவத்தில் மணிமேகலை அமுதசுரபியாகிய தெய்வப் பாத்திரத்தைப் பெறுதற்கு உறுதுணை புரிந்த திவதிலகை, அவட்கு அருளறத்தின் சிறப்பினே அழகுற விளக்குகின்ருள். பல பாவங்களையும் துணிந்து செய்யத் துண்டும் பாவியாகிய பசிப்பிணியின் கொடுமைகளைத் தொகுத்து உரைத்தாள் அத் தீவதிலகை. பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அனவைக்(கு) என்நா நிமிராது.” பசியால் வருந்தும் ஏழைமக்கட்கு உணவூட்டிப் பசி யாற்றும் அருளறத்தின் மாண்பு அளவிடற்கு அரியது. அதனேப் புரிவோரது புகழை நாவால் கவில இயலாது என்று மணிமேகலைக்கு நன்கு அறிவுறுத்தினுள் அத் தெய்வ நங்கை. மேலும், செல்வர்க்கு ஒரு பொருளே உதவுவோர் அறத்தினை விலை கூறுவோரே. உண்மை யான அறநெறி வாழ்க்கை என்பது வறிஞர்களின் அரிய பசியை அகற்றுவோரது வாழ்க்கையே. ஆதலின் வறுமையால் வாடுவோர்க்கு வளமான உணவை வழங்குவோர் உயிரை வழங்கும் உத்தமராவர். ‘மண்டினி குர்லத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே.2 என்று அருளறம் புரிவாரது அருமையையும் அத் தீவ திலகை விளக்கினுள். -