பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 95

யினும் இறந்தகால வாழ்க்கை சிறந்திருப்பதைக் காண் பான், முன்னோர் தோற்றிய நன்னெறிகள் யாவை என உணர்ந்து, அந்நெறி நின்று உயர்நிலை எய்த முயற்சிப்பன்இக்காலை, உலகிடை வாழ்ந்து உயர்நிலை எய்தித் தம் புகழ் நிறீஇச் சென்ற சான்றோர் பலருடைய உருவ ஒவியங்களையும் உருவச் சிலைகளையும் ஆங்காங்கே நாட்டப்பெறும் விழாக்கள் நடப்பதைக் காண்கின்றோம். அவ்வாறு அவ் விழாக்கள் நடப்பது அவர்க்குச் சிறப்பும் பூசனையும் செய்தற் பொருட்டன்று; அவர்கள், புலவர் பாடும் புகழ்நிலை எய்த ஆற்றிய நற்செயல்கள் யாவை? அவர்தம் வாழ்க்கை சென்ற நன்னெறி யாது? என்பன வற்றைக் கண்டு, தாமும் அச்செயல் புரிந்தும், அந் நெறி நின்றும் அவ்வுயர்நிலை அடைய வழி கோலுவதற்கே யாம். மேனாட்டுப் புலவர் ஒருவர், 'சான்றோர் தம் வாழ்க்கை நிலை,நாமும் நம்முடைய வாழ்க்கை நிலையை இறப்ப உயர்ந்ததாகச் செய்து கொள்ளுதல் கூடும் என் பதை நினைப்பூட்டுகின்றது” எனவும், "வாழ்க்கையில் வழியற்றுக் கலங்கும் மக்களை அது நல்வழியிற் செலுத் தும் இயல்புடையது' எனவுங் கூறுவர்.

இதனால், பழம்பெரும் மக்கள் தம் வாழ்க்கை நெறி யின் இயல்பினைக் காட்டும் படக்காட்சி போன்று விளங் கும் பண்டைய இலக்கியங்களை ஆராய்தலும் குற்றம் இன்று என அறிகின்றோம். நிற்க,

1 Lives of great men all remind us

We can make our lives sublime; And departing, leave behind us Foot prints on the sands of time; Foot prints, that perhaps another Sailing o’er life's solemn main A forlorn and shipwrecked brother ... . . . . . . Seeing shall take heart again. —H. W. Longfellow.