பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காவிரி

அவனுார் சேரலே செயற்பாலது என அறிந்து, தலைவன் பால் சென்று, தலைவியை இரவிடைக் கொண்டுதலைக் கழியுமாறு கூறுவாள், 'தலைவ! பொருள் பெறு நசை யால் செல்லுகின்ற நீர், இவளொடும் செல்வீராயின், அது நுமக்கும், இவட்கும் நன்மை தருவதொன்றாம்; அங்ங்ணமின்றி, மலர் போன்ற கண்களில் நீர் வடிய, அன்பற்றவராய் இவளைப் பிரிந்து செல்வீராயின், கார் காலத்து மாலைப் போழ்தில் இவள் படும் துன்பம் என்னாலே தாங்கப்படும் தன்மையை உடையது அன்று' (நற்றிணை, 37) என்கின்றனஸ். அது கேட்ட தலைவன், "தோழி! மிக்க புகழ் பொருந்திய நின் தந்தை, யினுடைய நெடிய மாளிகையின் கண், பெற்ற தாயோடு பிரியாது வைகும் மிக இளையளாகிய நின் தலைவி, 'மனையிடத்து உறைகின்ற சிவந்த காலையுடைய புறாவின் பேட்டோடு ஆண் புறா கூடி மகிழா நிற்பதை நோக்கித், தனித்திருத்தல் ஆற்றேனாய் வருந்துவேன் என்கின்றாள்" என்று கூறுகின்றனை; யான் கூ று வ ைத க் கேள்; இத்தி மரத்தின் விழுது, வைகறைப் போதிலே மேல் காற்று வீசுந் தோறும் நிலத்திலே படாது ஊசலாடிக் கீழே துயிலும் பிடியானைமீது புரளா நிற்கும் சுரத்தின் கண்ணே செல்லுதல் அவளால் இயலுவதன்று' என்று கூறி முதலில் மறுப்பான், மறுவலும் அவள் வற்புறுத்துவது கண்டு உடன்படுகின்றான்; (நற். 162)

இருள் நீங்கும் விடியற்காலம்; ஊர்களில் மகளிர் தயிர் கடையும் ஒலி கேட்கின்றது; தலைவி மெல்ல எழுந்து, தன் உருவினை யாரும் அறியாவண்ணம் மாற்றிக் கொள்ளுகின்றாள். தன் காவில் அணிந்துள்ள சிலம்பினைக் கழற்றி அதை அன்றுவரை தான்் Վեւգ-Ա4

பந்துடன் ஒர் இடத்தே வைத்துச் சில அடி மீளுகின்றாள்.

எண்ணம் மீண்டும் அவ்விரண்டன்பால் செல்கிறது: