பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 - öra?#

பிழையா நன்மொழியைத் தேறியே இன்று, 'தன்னை சன்ற தாய் தந்தையரையும்,அறிவும் ஒழுக்கமும் கற்பித்து வளர்த்த செவிலியையும், கூடி வளர்ந்த என்னையும், உடன் விளையாடும் ஆயத்தாரையும், மலையொத்த அடுக்கிய நிலை அமைந்த நெடிய நெற் கூட்டில் நிரம்பக் கொட்டிய நெல்லை உடைய தன் தாய் வீட்டையும் மதியாளாய்ப் பிரிந்து நின்னுடன் வருதற்கு ஒருப் பட்டுள்ளாள். ஆதலின், நின்னை அன்றி வேறு துணை யில்லா இவள், அண்ணாந்து உயர்ந்த அழகிய கொங்கை கள் தளரவும், பொன்போலும் மேனியில், கருமனி போலத் தாழ்ந்த நீண்ட கூந்தல் நரைக்கவும் முதுமை எய்துவாளாயினும், இவளைக் கைவிடாது காத்தல் நின் கடன்' (நற். க0) என்று கூறிக் கையடை செய்து பிரிந்து செல்வாளாயினள். -

தலைவியை இரவிடை அழைத்தேகும் தலைமகன் பொழுது புலர்ந்ததும், சுரமும், சுரத்திடை உளவாம் இடையூறும் கண்டு வருந்துகின்றாள் தலைவி எனக் கண்டு தலைவியை நோக்கி, 'வெள்ளிய பற்களை உடையாய்! யாம் செல்லும் வழியின் இருமருங்கும், குயில் கூவி விளையாடும் குளிர்ந்த சோலைகள் பலஉள்ளன. ஆதலின் வெயிலின் வெம்மை கண்டு அஞ்சாதே; அன்றியும், நெறியை அடுத்தடுத்துப் பற்பல சிற்றுரர்கள் உளவா கலின் சுரத்தின் அருமை கண்டும் அஞ்சாதே; அறிவற்ற செயலைச் செய்ய முயலும் ஆர்வமாக்கள், தாம் வழிபடு தெய்வத்தைத் தம் கண்ணெதிர் கண்டதையொப்ப, யான் நின்னைப்பெற முயன்றதனால் உளவாய துன்பம் எல்லாம் திர நின் அழகியதோளை அணையப்பெற்றனன். ஆதவின் இனி நீ நிழலைக் கானுந்தொறும் வழிவரும் வருத்தம் ர்ே நெடிது தங்கி இளைப்பாறியும், மணல் நிறைந்த இடத் தைக் காணுந்தோறும், ஆண்டெல்லாம் மணல் வீடு