பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்: கா. கோவிந்தன் 101.

கட்டி விளையாடல் புரிந்தும் செல்வாயாக' (நற் கூ) எனக் கூறி மகிழ்வித்துச் செல்கின்றான். தொடுவழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிக் கூடும் நீர்ப்பாசி போலத் தான்் ஆறுதல் கூறக்கூறத் தேறி மீண்டும் மீண்டும் அஞ்சுகின்ற தலைமகளைக் கண்ட தலைமகன்," மடப்பம் உடையாய்! புலியொடு போர் செய்தலாலே இரத்தம் தோய்ந்து புலால் நாறும் சிவந்த மருப்பையுடைய ஆண் யானை, தன் கன்றுடனே இளம்பிடியையும் தன் கையால் அனைத்துக் கொண்டு, வேங்கையின் பூக்களில் உள்ள தேனை உண்ணுதற்குக் கூடியுள்ள தேன் ஈக்கள் எல்லாம் ஒடுமாறு அம் மரத்தை முறித்து, அதன் பொன்போன்ற பூக்களைப் பறித்து அவற்றிற்கு ஊட்டாநிற்கும் இக்காட் டின் வனப்பினைக் காண்பாயாக' (நற். 202) என்பன போன்ற இன்னுரைகள் பலவற்றைக் கூறி மகிழ்வித்துக் கொண்டே செல்லுகின்றான். -

இவ்வாறு, இவர்கள் செல்வதை இடைவழியிற் கண்டவர்கள், சுரத்தின் கொடுமையையும், தலைவியின் இளமையையும், அவள் நடக்கமாட்டாமல் நடந்து செல்வ தையும் நோக்கி, "செல்வமிக்க தன் தந்தையின் அகன்ற வீட்டிடத்தே, ஆடுகின்ற பந்தை உருட்டுபவளைப் போல ஒடியோடி இவளுடைய பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் தடைபயிற்றுகின்றனவோ? (நற்.325)இவ்வாறு மடப்பமும் இளமையும் பொருந்திய இவளை முன்னே செல்ல விடுத்துப் பின்னே செல்லும் இவ்விளையான் உள்ளம், காற்றொடுபட்ட மாரிக்காலத்தே மலைபிளக்க இடிக்கும் இடியைக் காட்டிலும் கொடியது போலும்' (நற்.2) என்று மூதந்திக் கூறிச் செல்லா நிற்பர். -- -

இவ்வாறு கண்டார் கூறப் பல காவதம் శ్రీF செல்லுகின்றனர். தன் வீட்டை விட்டுப் பெய. யாத தலைமகள் இன்னும் எத்துணைக் க

ёт Commons sibiBOT (பேச்சு)7