பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Yū2 - - - காவிரி

தடக்க வேண்டுமோ என்னும் அச்சமிகுதியால் தலை: வனை நோக்கி, "நின்பெரும் மூதூர் யாண்டுளது?’ என்று வினவுகின்றாள். தலைவன் “மடத்தாய்! மூங்கில் நிறைந்த சிறிய மலையின் கண்ணே, எம்மூர்ப் பசுவின் திரையினங் கள் மேய்கின்ற போழ்து அவற்றின் கழுத்திலே கட்டப் பெற்ற தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிவா நிற்கும் எம்முடைய தன்மை மிக்க சிற்றுார் அதோ தோன்றுகின்றது காண்’ எனச்கூறி, அவளை விரைந்து நடக்குமாறு செய்வான், "ஞாயிறு மேலைத்திசை படர்த லாலே வெயிலும் குறைந்து விட்டது; ஆதலின், மழை பொழிந்த காலைப் போதிலே தன் அழகு மிக்க சிற கினைக் கண்டார் வியக்குமாறு விரித்தாடுகின்ற மயில் போன்ற மலர் அணிந்த தின் கூந்தல், வீசுகின்ற காற்றில்ே உளரும்படி சிறிது விரைந்து நடப்பாயாக' (நற்றிணை, 258) எனக் கூறி அழைத்துக் கொண்டு தன்னூர் செல்லு கின்றான். நிற்க. . -

தலைமகன், தன் மகளை வைகிருவிலே கொண்டு தலைக் கழிந்தான்் என்பதை அறிந்த நற்றாப் தலைவி யின் இளமை குறித்து வருந்துகின்றாள். 'முன்றில் என் மகளால் பேணி வளர்க்கப் பெற்ற வயலைக் கொடி வளம் உற்று விளங்குகின்றது. நேற்று, என் மகள், விளை யாடும் பந்தும், ஒரையாடும் பாவையும் கொண்டு அதன். அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அக்காலை, கன்றை ஈன்ற பசு ஒன்று அல்வயலைக் கொடியைத் தின்றுவிட்டது. அதைக்கண்ட அவள், பந்தையும்: பாவையையும்.ஆங்க்ேபோட்டுவிட்டு,ஓடிவந்து,தன் அழகிய வயிற்றில் அடித்துக் கொண்டு அழுவதைக் கண்ட யாலும் செவிலியும், அவள் அழுகையைப் போக்க, 'தேனொடு கலந்த இனிய பாலை உண்ணுக" என்று ஊட்டவும் உண் ணாது விம்மி விம்மி அழுதுகொண்டே இருந்தாள். இவ். வாறு மிகவும் இளமையுடையளாம் என் மகள், இன்று