பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 காவிரி

இவ்விருவர் கொள்கைகளிலும், காவிரி, அமர முனிவன் அகத்தியன் தனது கரகத்தினின்றும் போந்தது என்பது மறு பட்டில தாதலினாலும், 'குறுமுனி குண்ட கைப் பழம்புணர் வகையே’’ (திவாகரம்) என்றும். "ஆதிமா தவமுனி யகத்தியன் தரு, பூத நீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி" (பெரிய. நாட்டு.2) என்றும் கூறுதலி னாலும், காவிரி குறு முனிவன் கமண்டலத்தினின்றும் போந்தது என்பது பெறப்படும்; Y

காவிரி, மேற்குத் தொடர்ச்சி மலையில், மைசூர் நாட்டின் மேற்கு எல்லைக்கண் உள்ள குடகு (Coorg) நாட்டில் பிரம்மகிரி என்னும் மலையில், கடல் மட்டத் திற்குச் சற்றேரக்குறைய ஐய்யாயிரம் அடிகட்குமேல் தலைகாவிரி என்னுமிடத்தில் உற்பத்தியாகின்றது. இதனை, "குடா அது, பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற், பூவிரி புதுநீர்க் காவிரி (புறம், 166) என்றும், "குடமலைப் பிறந்த கொழும் பஃறார மொடு, கடல் வளனெதிரக் கயவாய் நெரிக்குங் காவிரி" (சிலப்.10: 106.108) என்றும், "குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி' (மலைபடு.527)என்றும் வரும் ஆன்றோர் கூற்றுக் களான் அறிக.

காவிரி, குடகுமலையில் உற்பத்தியாகி, சிறிது ஒழுகி, முப்பது அடி சதுரமும், மூன்று அடி ஆழமுமுள்ள பள்ளம் ஒன்றில் வீழ்ந்து, அதினின்றும் வழிந்தோடி வருகின்றது. புரட்டாசித் திங்களின் பிற்பகுதியும், ஐப்பசித் திங்களின் முற்பகுதியும் கூடிய முப்பது நாள்களிலும், குடகரும், மைசூர் நாட்டினரும், பிறரும் ஆங்குப் போந்து ஒன்று கூடுவர். பாட்டும், பண்ணும் எங்கும் முழங்கும். கார் காலம் கழிய, பயிர்களும், காடுகளும் வளர்ந்து பூத்து நிற்கும் தோற்றமும், முகிலற்று விளங்கும் வானின் தோற்றமும், அழகு நிறைந்து அவர்களுக்கு மிக்க இனிமை