பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்: கா. கோவிந்தன் - 105

மகளிர் பலரும் கூடித் துற்றிக் கூறிய கொடுமையும் இனிமையும் கலந்த அலர் உரையைக் கேட்ட யான் சில நாளளவும், அக் களவொழுக்கத்தை அறியாதேன்போல இருந்தேன்; மீண்டும் அலர் மிக எழுதல் கண்டு, ஒரோ வொருகால், அவள் களவொழுக்கத்தை யான் அறிந் துள்ளேன் என்பதை அவளுக்குக் காட்டும் முகத்தான்் "மகளே! நின் கூந்தல் பண்டே போலாது புது மணம் கமழுகின்றதே; அதன் காரணம் என்னையோ?” என்று வினாவினேன். ஆகவே, யானே தவறுடையேன்” (நற். 143) எனக் கூறி வருந்துதலே இதற்குச் சான்றாம்.

மேலும், 'வறிதே கிடக்கும் பந்தையும், நீரிடுவார் இன்றி வாடிய வயலைக் கொடியையும், அவர் ஆடிட மாகிய நொச்சியையும், அவள் இன்றித் தனியே உள்ள சோலையையும் காணுந்தொறும் உளவாம் வருத்தத்தைக் காட்டினும், சுரத்திடைச் செல்லும் என் மகள், ஆண்டுப் புறாவின் தெளிந்த கூப்பீட்டின் ஒசையைக் கேட்டு வருந்தி, தன் காதலனை ஆண்டுத் துன்புறுத்துவாள் கொல்லோ என்பதை எண்ணுங்கால் உளவாம் வருத்தமே மிகப் பெரிதாயுளது' (நற் 305) எனக் கூறுமுகத்தான்், தன் மகளைக் கொண்டுதலைக்கழிந்த அவள் காதலன் பால் கொண்ட அன்பினைப் புலப்படுத்துகின்றாள் தாய் ஒருத்தி. நிற்க; + -

இவ்வாறு தாய் புலம்புவது கண்ட செவிலி, நற்றாயை நோக்கி, "தலைவனும், தலைவியும் யாண்டுச் சென்று விடுவர்; நாடுதோறும், ஊர்தோறும், குடிதோறும் சென்று தேடிக் கொணர்வல் ஆற்றியிரு' என்று கூறித் தலைமகளைத் தேடிச் சுரத்திடை வருகின்றாள். வழியில் தன் மகளும் மருமகனும் போன்றார் இருவர் கூடி வருவதைச் சேய்மைக்கண் கண்டு, அவர்களைத்