பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - - * . strastoff)

தன்னுடைய மகளாகவும் மருகனாகவும் நினைக் கின்றாள்; அவர்கள் அண்மையில் வந்தவழி அல்லாராதல் அறிந்து, அவர்களை நெருங்கித் தன் மகளைப்பற்றி வினவு வாள், "சேய்மைக்கண் இருந்துவரும் அரசன் மகனே! நின்னுடன் வந்துள்ள இவள், நேற்றுச் சுரத்தின்கண் நெடுந்துாரம் சென்ற என் மகள்போலத் தோன்றுவது கண்டு என் கண்கள் நீர் நிறையப் பெறுகின்றன. அவள் நுண்ணிய பல கோடுகள் பொருந்திய அல்குலையும், தோன்றி விளங்கும் சுணங்கையும், கூரிய வெள்ளிய பற்களையும், பாதிரி மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலையையும், சில வளையல்களையும், திரண்ட கூந்தலையும் உடையான். அவளை நீவிர் இடைவழியில் யாண்டேனும் கண்டீரோ? கண்டீராயின், என் ஆற்றா மையைக் கண் நீயிர், அவள் சென்ற திறத்தையும், கண்டு பேசிய வகையையும் கூறுவீராயின் நுமக்குப் புகழ்மிக உண்டாம்; நும்மை அவளுடைய தந்தையின் ஊரில் விருந்தேற்று வழிபடுவேன்; வண்மை மிக்க அவள் தந்தை ஊரும் இதுவே: யானே அவளை ஈன்று பாதுகாத்தேன்’ (நற். 198) என்று கூறும் திறம் அவள் தலைவி.பால் கொண்டுள்ள அன்பின் மிகுதியை வெளிக்குக் காட்டுவ தாய் உள்ளது. r -

சண்டு. திருவாசகம் பாடிய மணிவாசகனார் இயற்றிய திருக்கோவையாரில் உள்ள பாட்டொன்றை நினைப்பூட்டிச் செல்லுகின்றேன். தன் மகள், தலைவன் ஒருவனுடன் சென்றுவிட்டாள் எனக் கவன்ற செவிலி, அவர்கள் சென்ற சுரத்திடைத் தேடிச் செல்லுகின்றாள். எதிரே, தலைவனும் தலைவியுமாக இருவர் வருவதைக் கண்டு, அவர்களைத் தன்னுடைய மகளாகவும் மருகனாக வும் கருதி உவந்த உள்ளத்தளாய் விரைந்து செல்லு கின்றாள், அணுகி நோக்கி, அவர்கள், தம் மகளும் மருக னும் அல்லர் என்பதையும், அவர்களும். தன் மகளும்